இந்த கட்டிடம் ரூ 84 கோடியாம்.. கட்டும்போதே புதைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.. ஷாக் சம்பவம்
திருப்பூர்: திருப்பூரில் ரூ 84 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த அரசு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாள் மழைக்கே மண்ணில் புதைந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருப்பூர் ஆண்டிபாளையத்தை அரசு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வந்தது. இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இருப்பினும், இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த வாரம் பெய்த மழையில் இந்த கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்தது.

இந்தச் சூழலில் திருப்பூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவில் நல்ல மழை பெய்தது. அப்போது திடீரென இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி மண்ணுக்குள் புதையத் தொடங்கியது. சுமார் அரை அடி வரை இந்த கட்டிடம் மண்ணுக்குள் புதைந்துள்ளது.
ஒப்பந்ததாரர்கள் தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தியுள்ளதாகவும் இதனால் கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
கட்டி முடிக்கும் முன்னரே ஒரு நாள் மழையில் அரசு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மண்ணுக்குள் புதைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்தக் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தற்போது நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications