பிரபல அரசியல்வாதிகளின் மது ஆலைகள்.. ரூ.10 லட்சம் தரும் திமுக அரசு.. ஆவேசத்துடன் வந்தது யார் பாருங்க
திருப்பூர்: அரசின் தவறான செயல்பாட்டால், தமிழகம் தடம் மாறிப் போகிறது என்று இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.. அத்துடன் தமிழக அரசு மது விற்பனையை அதிகப்படுத்தச் சிந்திப்பதை நிறுத்தி, போதை மறுவாழ்வு இல்லங்களை மாவட்டந்தோறும் திறந்தாக வேண்டியது அவசியம் முக்கிய கோரிக்கயை விடுத்திருக்கிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 132க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்... இதில் மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

கண்டனம்: கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன... கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளர்.
இந்து முன்னணி: அந்தவகையில், இந்து முன்னணியும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.. இதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:
"விலை மலிவான போதை அதிகமாக, எதை வேண்டுமானாலும் நாடும் அவலநிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. வாலிபர்கள் போதைக்கு அடிமையாகி பொன்னான எதிர்காலத்தை இழந்து நடைபிணமாக வாழ்கின்றனர். கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, அதிலும், சாராயத்தை விற்றவருக்கும் அரசு 10 லட்சம் ரூபாயை வாரி வழங்கியது. இதனால் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை தான் ஊக்கம் பெற்றது.
மது வருமானம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய இறப்பு ஏன் என்று தமிழக அரசு சிந்தித்ததா? உயிர்கள் போன பின்பு நடவடிக்கை என்பது, கண்துடைப்பு நாடகம். பீஹாரிலும், குஜராத்திலும் மது வருமானம் இல்லாத ஆட்சி நடக்கிறது. தமிழகமோ மீளமுடியாத அளவு போதையில் செல்கிறது. மது ஆலைகளை நடத்தும் அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் பினாமிகளால் தமிழகம் சீரழிந்து வருகிறது.
தமிழக அரசு மது விற்பனையை அதிகப்படுத்தச் சிந்திப்பதை நிறுத்தி, போதை மறுவாழ்வு இல்லங்களை மாவட்டந்தோறும் திறந்தாக வேண்டியது அவசியம். முதலில் போதையில் வீழ்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்துடைப்பு நாடகம் நடத்துவது மட்டும் இதற்குத் தீர்வு தராது" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications