வெளிநாட்டில் இருந்து.. சொன்னதெல்லாம் பொய்.. ஆர்எஸ்எஸ் புள்ளியை போலீஸ் காத்திருந்து தூக்கியது எப்படி?
திருப்பூர்: தமிழ்நாட்டில் திமுகவினர் அரசுப்பள்ளியில் சாராயம் காய்ச்சியதாக பொய்யான செய்தி ஒன்றை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரவண பிரசாத் கைது செய்யப்பட்டு உள்ளார்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.
ஏற்கனவே செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் உச்சத்தில் இருந்தது. 90 களில் உச்சத்தில் இருந்த பிஸ்னஸ் ஆகும் இது. அதன்பின் அரசு தீவிரமாக செயல்பட்டு இதை முடக்கியது.
அப்போது கண்கள் போன பரிதாபமும், உயிர்கள் போன கொடூரமும் அரங்கேறியது. அதன்பின் டாஸ்மாக் வந்ததும் கள்ள சாராயத்திற்கான தேவை குறைந்தது. படிப்படியாக கள்ளச்சாராயம் அதிகம் ஆனது.
இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் திமுகவினர் அரசுப்பள்ளியில் சாராயம் காய்ச்சியதாக பொய்யான செய்தி ஒன்றை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரவண பிரசாத் என்பவர் வெளியிட்டார். ஊடகங்களில் வெளியாகாத செய்தியை ஊடகங்களில் வெளியானது போல காட்டி இணையத்தில் செய்தி வெளியிட்டார்.
அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு இப்படி செய்திகளை வெளியிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதற்கு முன்பே வதந்திகளை பரப்பும் வகையில், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் செய்திகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

உதாரணமாக நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களில் சென்டர்கள் அமைக்கப்பட்டதற்கு.. மாணவிகளே இந்த தேர்வு மையங்களை தேர்வு செய்து இருப்பார்கள். பாய் பிரண்டுகளுடன் சுற்ற இந்த மையங்களை தேர்வு செய்து இருப்பார்கள் என்று சர்ச்சை போஸ்டை போட்டு இருந்தார். அதோடு பிரியாணியில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தை இஸ்லாமியர்கள் கலப்பதாகவும் போஸ்ட் செய்து இருந்தார்.
இது போல தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் பல வதந்திகளை பரப்பி வந்தார். அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு இப்படி செய்திகளை வெளியிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரவண பிரசாத்திற்கு எதிராக திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பலசுப்பிரமணியம் என்பவர் கோவையில் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
அவர் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்க காத்துகொண்டு இருந்தனர். இதையடுத்து நேற்று ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரவண பிரசாத் தமிழ்நாடு திரும்பியதாக தகவல் வந்தது. அவர் கோவை விமானம் நிலையம் வந்த தகவல் கிடைத்த நிலையில் திருப்பூர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
விமான நிலையத்திலேயே வைத்து அவரை இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கோர்ட் விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
கைது: சமீபத்தில்தான் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட யுவராஜ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த பாஜகவை சேர்ந்த கட்டெறும்பு என்னும் இசக்கி கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளே ஒரு யுவராஜ் இருக்கலாம்.. ஆனால் வெளியே ஆயிரம் யுவராஜ் இருக்கிறோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் இவர் போஸ்ட் செய்து இருந்தார்.
ட்விட்டரில் கட்டெறும்பு என்னும் பெயரில் இயங்கி வரும் இசக்கி ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை போஸ்ட் செய்து வருகிறார். இவர் பாஜக நிர்வாகி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று போலீசார் மூலம் இசக்கி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த அவரை கைது செய்து போலீசார் ரிமாண்ட் செய்தனர். இதையடுத்து உடல்நிலையை காரணம் காட்டி கோர்ட் விசாரணையில் இசக்கி மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அவரின் மன்னிப்பு கடிதத்தை அடுத்து கண்டிஷன் பெயிலில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications