மாமியார் தான் காரணம்.. பெல்ட்டால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்றது ஏன்.. இளைஞர் பரபர வாக்குமூலம்

திருப்பூரில் இளம் மனைவியை கொன்ற காதல் கணவன் கைதானார்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: மனைவியை பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொன்றதற்கான காரணத்தை கணவன் திருப்பூர் போலீசில் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை சேர்ந்தவர் அருண்குமார்.. 23 வயதாகிறது.. திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி பெயர் வைஷ்ணவி.. 19 வயதாகிறது.. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. இவர்களின் வீடு தற்போது பண்ணாரியம்மன் நகரில் உள்ளது..

 சந்தேகம்

சந்தேகம்

2 நாளைக்கு முன்பு, தம்பதி இருவரும் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குள் வந்தனர்.. ஆனால், அதற்கு பிறகு கதவை திறக்கவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.. அப்போது வைஷ்ணவி சடலமாக விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள்.. இதுகுறித்து உடனடியாக திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தனர்..

 விசாரணை

விசாரணை

போலீசாரும் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போது, தம்பதிக்குள் தகராறு வந்துள்ளதால்தான், மனைவியை கணவன் கழுத்தை நெரித்துகொன்றதாக முதல்கட்டமாக தகவல் வெளியானது.. ஆனால், அதற்குள் அருண்குமார் தப்பித்து சென்றுவிட்டிருந்தபடியால், இதுகுறித்த தகவல் முழுமையாக வெளிவரவில்லை..

 தனிப்படை போலீஸ்

தனிப்படை போலீஸ்

எனவே, தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி அருண்குமாரை தேடி வந்த நிலையில், கூத்தம்பாளையம் பகுதியில் நண்பர்கள் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது அவர் தந்த வாக்குமூலத்தில், "நான் வைஷ்ணவியை திருமணம் செய்து கொண்டது வைஷ்ணவியின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை... என்னிடம் வசதி இல்லை.. கையில் காசு பணம் இல்லை என்பதால், என் மாமியார் என்னை அடிக்கடி மட்டம் தட்டி கொண்டே இருந்தார்.. அதனால், வைஷ்ணவியை தன் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்...

மாமியார்

மாமியார்

நானும் பலமுறை வைஷ்ணவியை, அவர் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.. ஆனால் தன்னுடனேயே மகளை தங்க வைத்து கொள்ள வேண்டும் என்று என் மாமியார் விரும்பினார். இதுதான் எங்களுக்குள் தகராறாக வெடித்தது. இப்படித்தான் சம்பவத்தன்றும் நடந்த தகராறில், பெல்ட்டால் வைஷ்ணவியின் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு தப்பிசென்றேன்" என்றார். 2 நாட்களாகியும், இளம் மனைவியை கணவன் கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு அடங்காமல் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+