உல்லாசத்துக்கு அழைத்த பனியன் கம்பெனி மேலாளரை கட்டிப்போட்டு உதைத்த மதுரை பெண்கள்.. வீடியோ வைரல்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பல்லடம் அருகே உல்லாசத்துக்கு அழைத்த பனியன் கம்பெனி மேலாளரை மதுரை பெண்கள் கட்டிப்போட்டு அடித்து உதைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் 2 பெண்களையும், மேலாளரையும் போலீசார் கைது செய்தனர்.

Recommended Video

    தவறாக நடந்து கொண்ட பனியன் கம்பெனி மேனேஜர்.. புகார் கொடுத்த இளம்பெண் பேட்டி - வீடியோ

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பனியன் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருபவர் சிவக்குமார் வயது (43). இவர் அங்கு பணியாற்றும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    அத்துடன் சிவக்குமார் ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி உள்ளார். அதில் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளாராம்.

    சிவக்குமாருக்கு அடி உதை

    சிவக்குமாருக்கு அடி உதை

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணும், அவரது தோழியும், பல்லடம் அடுத்த பாச்சாக்காட்டுபபாளையம் குட்டைக்கு கடந்த 14ம் தேதி சிவக்குமாரை வரவழைத்தனர். அங்கு சிவக்குமார் மீது அந்த பெண்கள் மிளகாய் பொடியை முகத்தில் தூவினர். பின்னர் சரமாரியாக தாக்கினர். அதன்பின்னர் தங்களுக்கு சிவக்குமார் கொடுத்த தொல்லையை பல்லடம் போலீசில் கூறி புகார் அளித்தனர்.

    சிவக்குமார் கைது

    சிவக்குமார் கைது

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், மதுரையைச் சேர்ந்த அந்த பெண்களுக்கு தொடர்நது பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் அத்துடன் வேலையை விட்டும் நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், சிவக்குமாரை பல்லடம் அருகே வரவழைத்து தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கலெக்டர் ஆபிஸில் புகார்

    கலெக்டர் ஆபிஸில் புகார்

    இதேபோல் சிவக்குமார் அளித்த புகாரை ஏற்று இரு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில், உல்லாசத்துக்கு அழைத்த மேலாளர் சிவக்குமாரை தாக்கியதால் தங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது என்றும், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர்.

    திருப்பூரில் பரபரப்பு

    திருப்பூரில் பரபரப்பு

    உல்லாசத்துக்கு அழைத்த பனியன் மேலாளரை பெண்கள் கட்டிப்போட்டு, மிளகாய் பொடி தூவி சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்து.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+