இரு குழந்தைகள் இரும்பு கம்பியால் அடித்து கொலை..தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்! திருப்பூரில் சோகம்!
திருப்பூர் அருகே தலைவலியால் அவதிப்பட்டு வந்த தாய் தனது இரண்டு குழந்தைகளை கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு பூச்சி மருந்து குடித்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மவட்டம் வெள்ளகோவில், அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கனகசம்பத் (45). இவர் விவசாயி. இவருடைய மனைவி ரேவதி
( 40). இவர்களது மகள் ஹர்சிதா (13), மகன் கலைவேந்தன் (7).
ஹர்சிதா 8ஆம் வகுப்பும் கலைவேந்தன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்களுக்கு ஊரை ஒட்டியுள்ள தோட்டத்தில் ஒரு வீடும், ஊருக்குள் ஒரு வீடும் உள்ளது. ரேவதிக்கு தலைவலி இருந்து வந்ததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

தலைவலி
இதனிடையே தலைவலி அதிகமாகும்போது ரேவதி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை, கனகசம்பத், கடை வீதிக்கு சென்று விட்டார். அப்போது பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ரேவதி ஊரை ஒட்டியுள்ள தோட்டத்து வீட்டிற்கு சென்றார்.

இரு குழந்தைகள்
தனது இரண்டு குழந்தைகளையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, தானும் பூச்சி மருத்து குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
வீடு திரும்பிய கனகசம்பத், மனைவி பிள்ளைகளை காணாததால் தோட்டத்து வீட்டிற்கு சென்றிருப்பார்கள் என நினைத்து அங்கு சென்றுள்ளார்.

அதிர்ச்சி
அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மனைவியை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது ரேவதி இரண்டு குழந்தைகளை கம்பியால் அடித்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து விட்டதாக கணவரிடம் கூறியுள்ளார்.

ரேவதி
இதையடுத்து ரேவதிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்தது வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உயிரிழந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெள்ளகோவில் போலீஸ்
இது குறித்து வெள்ளகோவில் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயே பெற்ற குழந்தைகளை கொடூரமாக அடித்து கொலை செய்து விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைவலிதான் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications