திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் வந்த மோடி.. பிரதமர் தொடங்கி வைத்த திட்டங்கள் இவைதான்!

தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, திருப்பூரில் 5 முக்கிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

Google Oneindia Tamil News

திருப்பூர்: தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, 5 முக்கிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடி, தற்போது தமிழகம் வருகை புரிந்துள்ளது. திருப்பூரில் அவர் இன்று பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். திருப்பூர் வந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நினைவுப்பரிசு வழங்கினார். இதற்காக பெரிய விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

PM Modi In Tamilnadu: What are the schemes PM inaugurated in TN

விழா மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வணக்கம் கூறி பிரதமரை வரவேற்றார். மத்திய அமைச்சர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் மேடையில் இருந்தனர்.

இதில் பின்வரும் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்,

1.திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி. மருத்துவமனை மூலம் 1.22 லட்சம் ஊழியர்கள், பணியாளர்கள் பலன் பெறுவார்கள். 100 படுக்கை வசதிகளை கொண்டது இந்த மருத்துவமனை.

2.அதேபோல் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இரண்டு விமான நிலையங்களும் உலகத்தரத்துடன் அதிநவீனமாக மாற்றப்படும் என்கிறார்கள்.

3.சென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐசி மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் 2.5 லட்சம் பணியாளர்கள், ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

4. மேலும் எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷின் துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

5. சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரபேட்டை இடையிலான மெட்ரோ சேவையை மோடி தொடங்கி வைத்தார். . 10 கிமீ தூரத்திற்கு இந்த சேவை அமைக்கப்பட்டுள்ளது.கைது கூவம் நதிக்கும் கீழேயும் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
PM Modi In Tamilnadu: What are the schemes PM inaugurated in Tamilnadu?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X