திருப்பூர் பல்லடம் அருகே பிஏபி வாய்க்கால் உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர்.. விரைந்த அதிகாரிகள்
திருப்பூர்: திருப்பூர் கோவை மாவட்ட்த்தில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால் 124 கிலோ மீட்டர் நீளம் கொண்டது, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் 76வது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்லடம் அடுத்த வாவி பாளையம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் உடைப்பை சரி செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
கொங்கு மண்டலத்திற்கு இன்று முக்கியமான நீர் ஆதாரமாக உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு வனப்பபகுதியில் உள்ள ஆறுகள், மேற்கே அரபிக்கடல் நோக்கி பாய்ந்தது கும். அதனை நீரைச் சுரங்கங்கள் மற்றும் இணைப்புக் கால்வாய்கள் மூலம் திருப்பி, வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் கிழக்கு மாவட்டங்களுக்குக் கொண்டு வருவதற்காக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால் உருவாக்கப்பட்டது. இந்த கால்வாய் தான் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பல்லடம் உள்பட கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயத்தை செழிப்பாக்க காரணமாக உள்ளது.பொள்ளாச்சியின் பசுமைக்கு இந்த கால்வாய் தான் காரணம்.

இந்த கால்வாயை பொறுத்தவரை திருமூர்த்தி அணை முதல் கடைமடை வரை பிரதான கால்வாயின் மொத்த நீளம் சுமார் 124 முதல் 127 கிலோமீட்டர் வரை உள்ளது. இந்தத் திட்டம் மூலம் கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு மாவட்டங்களின் சில பகுதிகள் உட்பட, சுமார் 3.77 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி பெறுகிறது. பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 900 முதல் 1100 கன அடி வரை தண்ணீர் திறக்க முடியும்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில் பிஏபி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் 76வது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாவி பாளையம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 46வது கிலோமீட்டரில் உள்ள அரசூர் பகுதியில் தற்காலிகமாக தண்ணீரை மாற்றி உப்பாறு அணைக்கு தண்ணீர் திருப்பி விட்டுள்ளனர். சில வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வாய்க்கால் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் விவசாய நிலத்தில் புகுந்தது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால் கடைமடைக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பிஏபி வாய்க்கால் உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர் #Tiruppur #PAP #Pollachi #palladam pic.twitter.com/JY4JY7zSDm
— velmurugan (@velmurugantheni) November 13, 2025












Click it and Unblock the Notifications