இங்க என்ன சொல்லுது.. ஜெசி, ஜெசின்னு சொல்லுதா.. கோவையே வியந்து பார்க்கும் போஸ்டர்
திருப்பூர்: பூனைக்காக ஒரு போஸ்டரா என்று ஆச்சரியத்துடன் கோவை அருகே, பொதுமக்கள் பார்த்துச் செல்கிறார்கள்.
Recommended Video
கோவை, ராமநாதபுரம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன். இவர் தனது வீட்டில் வெளிநாட்டு வகை பூனை ஒன்றை கடந்த ஆறு வருடங்களாக வளர்த்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 29ம் இவரது வளர்ப்பு பூனை காணாமல் போய்விட்டதாம். இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பூனையை தேடி வந்துள்ளார்.

பூனையை காணோம்
இருப்பினும், பூனையை கண்டுபிடிக்க முடியாத நிலையில் கிருபாகரன் ரொம்பவே சோர்ந்து போய்விட்டார். இந்த நிலையில்தான், கோவை, ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டியுள்ளார்.

போஸ்டர்
அந்த போஸ்டரில், காணாமல் போன பூனை தொடர்பாக, தகவல் அளித்தாலோ கண்டு பிடித்து கொடுத்தாலோ 5000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அச்சிடப்பட்டு உள்ளது. மேலும், பூனையின் அடையாளம் குறித்து பதிவிடபட்டுள்ளதை பார்த்து செல்லும் பொதுமக்கள், பூனைக்காக ஒரு போஸ்டரா என ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

நாய்க்குட்டி
ஆனால், இப்படியான சம்பவங்கள் நமக்கு புதிது கிடையாது. நாய்க்குட்டியை காணவில்லை என்று பத்திரிக்கைகளில் கலர் விளம்பரம் கொடுத்தவர்களையும் நாம் பார்த்துள்ளோம். இப்போது, போஸ்டர் அடித்து பூனை குட்டியை தேடுபவர்களையும் பார்த்துள்ளோம்.

செல்ல பிராணிகள்
மனிதனை மட்டும்தான் தேட வேண்டுமென்று கிடையாது. பாசம் வைத்து விட்டால், வாயில்லா ஜீவன்களும் மனிதனுக்கு ஈடானவையாக மாறிப் போய்விடுகின்றன. வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு மாதம் பல ஆயிரம் செலவிட்டு உணவுகளும், இருப்பிடமும் கொடுத்து பார்த்துக் கொள்ளும் மனப்பாங்கு வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில், இங்கே ஜெஸ்சி, ஜெஸ்சி என்று கேட்கிறதா என்ற பிரபல சினிமா டயலாக்கைப் போல, ஜெசியை காணோம் என்று தேடி வருகிறார் இந்த நபர்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications