ராகுல் காந்தி ஜெயில் தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமே இல்லை.. “வாயால் கெட்டார்”.. எச்.ராஜா தாக்கு
திருப்பூர் : ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல அவராகவே வாயைக் கொடுத்து கெட்டார் ராகுல் எனத் தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில், இன்று எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் ராகுல் காந்தி.
இந்த நடவடிக்கை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சூரத் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் இன்று அறிவித்துள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவுக்கு சம்பந்தம் இல்லை
இந்நிலையில், இன்று காங்கேயம் அருகே பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது பற்றிப் பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, "தேர்தல் பிரசாரத்தில் ராகுல், நீரவ் மோடியை திட்ட வேண்டும் என்பதற்காக மோடி எனும் சமுதாயத்தினர் எல்லாம் பிராடு என பேசியதால் அந்த சமுதாயத்தில் இருந்த ஒரு பெரியவர் ராகுல் அவதூறாக பேசியதாக வழக்கு தொடர்ந்தார்.இது பாஜக அரசாங்கம் போட்ட வழக்கு அல்ல, குஜராத் அரசு போட்ட வழக்கு அல்ல, பாஜக நபர்கள் போட்ட வழக்கும் அல்ல.

தன் வாயால் கெட்டார் ராகுல்
மோடி என்ற சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்காக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் போட்ட வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்துள்ளது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது. சட்டம் என்பது அனைவருக்கும் பொருந்தும். அந்த அடிப்படையிலேயே ராகுல் காந்திக்கு தண்டனை கிடைத்துள்ளது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல அப்படி கெட்டார் ராகுல். இவ்விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதே கிடையாது." எனத் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் மீது காட்டம்
மேலும் பேசிய எச்.ராஜா, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் சொல்வதற்கும், அரசு செயல்படுத்துவதற்கும் எந்த உண்மையும் இல்லை. கடந்த முறை 2000க்கும் மேற்பட்ட பேருந்துகள் வாங்கப்படுவதாக தெரிவித்திருந்தார். அது குறித்து இந்த முறை பேசவே இல்லை. இந்த முறை மீண்டும் 1000 பேருந்துகள் வாங்குவதாகவும், 500 பேருந்துகளை புதுப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பெயருக்கு பட்ஜெட்டை வாசித்துள்ளார் நிதி அமைச்சர். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மக்களுக்கு பயனில்லாத பட்ஜெட். பட்ஜெட்டுக்கும் அவர்களுடைய செயல்பாட்டிற்கும் சம்மந்தமில்லை. பட்ஜெட் குறித்து சுக்குமி, லகதி, திப்புலி என அமைச்சர் வாசிக்கிறார். சென்றமுறை 243 கோடி ரூபாய் கூட்டுறவுத்துறைக்கு ஒதுக்கப்பட்டது.இந்த முறை கூட்டுறவிற்கு ஒன்றுமே ஒதுக்கவில்லை" என விமர்சித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications