Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில்.. பொருட்கள் எடை சரியா இருக்கா? திருப்பூரில் வசமாக மாட்டிக்கிட்ட பெண் ஊழியர்.. வீடியோ வேற

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: ரேஷன் பொருட்களின் எடைகளை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

Ration card holders and female ration shop employee caught in Tiruppur ration shop

ரேஷன் அட்டைகள்: அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன. மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறைதீர்ப்பு முகாம்: அந்தவகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.. அதேபோல, அடுத்த ஒரு வருடத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்..

அப்போது ராதாகிருஷ்ணன், ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை பிறப்பித்திருந்தார்.. "அரிசி, பருப்புடன் உள்ளிட்ட பொருட்களை தவிர, உப்பு, சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களும் ரேஷனில் விற்பனை செய்யப்படுகின்றன.. ஊழியர்கள் சில நேரங்களில் அட்டைதாரர்களை அவர்களுக்கு விருப்பமில்லாத இந்த பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன..

Ration card holders and female ration shop employee caught in Tiruppur ration shop

கட்டாய உத்தரவு: ரேஷன் கடைகளில் விருப்பமில்லாத பொருட்களை வாங்க சொல்லி ஊழியர்கள் எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது என்றெல்லாம் நிறைய உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஆங்காங்கே எடை குறைவாக பொருட்களை வழங்குவதாக புகார்கள் வெடித்து வருகின்றன.. குறிப்பாக, அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்போது அவை எடை குறைவாக நுகர்வோருக்கு வழங்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன..

எனவே இது குறித்து நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், எடை குறைவை கண்காணிக்கும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட கலெக்டர் ரேஷன் கடைகளை ஆய்வு செய்து நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்று கண்காணித்து, எடை குறைவாக வழங்கும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தபடியே உள்ளன.. இதோ இன்றைய தினம்கூட திருப்பூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது..

சிக்கிய பெண் ஊழியர்: விஜயாபுரம் பொன்முத்து பகுதியில் உள்ள ரேஷன் கடையில், கஸ்டமர் ஒருவர் துவரம் பருப்பு வாங்கியுள்ளார்... எடையில் சந்தேகமடைந்த அவர், மின்னனு தராசை பார்க்க சென்றபோது, அங்கிருந்த பெண் ஊழியர், டக்கென வேகமாக மாற்றம் செய்துள்ளார்.. இதனால், ஏற்கனவே வாங்கிய துவரம் பருப்பை எடைபோட்டுக்காட்ட சொன்னபோது, அந்த ஊழியர் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்..

திருப்பூரில் ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியரின் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அதிகாரிகளின் கவனத்துக்கும் இந்த வீடியோ சென்றுள்ளதாக தெரிகிறது.. விரைவில் இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், எடை குறைவான பொருட்களை வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், தமிழகம் முழுவதும் அதிரடி நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க போகிறார்களாம்.. கூட்டுறவுத் துறை எடுக்க போகும் இந்த அதிரடியால், ரேஷன் அட்டைதாரர்கள் நிம்மதியும், நம்பிக்கையும் அடைந்துள்ளனர். !!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+