இரவில் வீடுகள் மீது கல்வீச்சு! யாருனு தெரியலை! ஒருவேளை குட்டிச்சாத்தானா? திருப்பூர் அருகே திக் திக்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், படியூர் ஊராட்சியில் ஒட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக நள்ளிரவு நேரத்தில் வீடுகளின் மீது கற்கள் விழுகிறது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் அருகில் உள்ள கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் ஒட்டப்பாளையம் கிராமத்தில் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 15 நாட்களாக இரவு 7 மணி முதல் இரவு 12 மணி வரை வீடுகளின் மேல் கல்வீச்சு நடப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அந்த கற்களை யார் வீசுகிறார்கள் என தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு வீடாக கற்கள் விழ ஆரம்பித்ததால் 9 வீடுகளில் ஓடுகள் உடைந்து சேதமடைந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரவு நேரத்தில் விழுந்த கற்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள கோயிலில் தங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தை தொலைத்துவிட்டு கற்களை யார் வீசியது என தேடியும் யாரும் சிக்கவில்லை. இது குறித்து படியூர் ஊராட்சி மற்றும் காங்கேயம் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் ஊராட்சி தலைவர், காங்கேயம் போலீஸார் சம்பவ இடத்தில் உள்ளனர். ஆனாலும் கற்கள் வந்து விழுகிறது, அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள். இரவு மட்டுமல்லாமல் பகலிலும் வீடுகள் மீது கற்கள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். இதையடுத்து மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கிராமத்தின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
20 போகஸ் லைட்டுகள் வைக்கப்பட்டு கிரேன்கள மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. இதுகுறித்து மக்கள் கூறுகையில் எத்தனை நாளைக்குத்தான் கல்லடி வாங்குவது, வேறு ஊருக்கு சென்றுவிடலாம் போலிருக்கிறது. 15 நாட்களுக்கு மேலாக நாங்களும் தூக்கத்தை தொலைத்து யார் கல் வீசுகிறார்கள் என பார்த்தோம். ஆனால் எதுவும் தெரியவில்லை.
இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நேரங்களிலும் டிரோன் கேமரா மூலமும் கிராமத்தை கண்காணித்து வருகிறார்கள். அவ்வாறு கண்காணித்தும் கற்கள் விழுகின்றன. அந்த கல் எங்கிருந்து விழுகிறது என தெரியவில்லை. கல் வீசுவது மனுஷனா இல்லை குட்டிச் சாத்தானா என தெரியவில்லை. போலீஸார் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். விரைந்து கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications