125 ஆடுகள் விற்றால் ரஃபேல் வாட்ச் வாங்கலாம்.. அண்ணாமலைக்கு குட் ஷெபர்டு பட்டம்..சிவசேனாதிபதி கிண்டல்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தமிழ்நாட்டில் 125 ஆடுகள் விற்றால் தான் ரூ.5 லட்சத்திற்கான ரஃபேல் வாட்ச் வாங்க முடியும் என்றும், அண்ணாமலை வாங்கிய ரகசியத்தை தங்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று திமுக நிர்வாகி கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆடு மேய்ப்பர் என்ற பட்டத்தையும் கார்த்திகேய சிவசேனாதிபதி அண்ணாமலைக்கு கொடுத்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் விவகாரம் அரசியலில் தொடர்ந்து விவாதமாகி வருகிறது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரஃபேல் வாட்சிற்கான ரசீதை வெளியிட முடியுமா என்று சவால் விட்டும், இதுவரை ரசீது வெளியிடப்படவில்லை.

ஏப்ரல் மாதத்தில் ரஃபேல் வாட்ச்சிற்கான பில் வெளியிடப்படும், டீ கடையில் பேசும் போது ரசீது வெளியிடப்படும் என்று அண்ணாமலை பதிலளித்து வருகிறார். இருப்பினும் திமுகவினர் ரஃபேல் வாட்ச் விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கார்த்திகேய சிவசேனாதிபதி

கார்த்திகேய சிவசேனாதிபதி

இந்த நிலையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமன ஆணைகளை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜோசியரை பார்ப்பாரோ?

ஜோசியரை பார்ப்பாரோ?

புலம்பெயர் தமிழர் நல வாரியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு காங்கேயம் வந்த கார்த்திகேய சிவசேனாபதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜோசியரை பார்த்துவிட்டு ரஃபேல் வாட்ச்சிற்கான பில் கொடுப்பார் என்று நினைக்கிறேன். இதற்கென்ன நேரம், காலமா பார்ப்பார்கள்? பில் இருந்தால் கொடுக்க வேண்டியது தானே.

125 ஆடுகள்

125 ஆடுகள்

தேசபக்தி என்பது ஒரு ஐயோக்கியனின் கடைசி புகலிடம் என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். அண்ணாமலை கட்டி உள்ள வாட்ச் விலை ரூ.5.12 லட்சம் என்று கூறுகிறார்கள். அண்ணாமலை 125 ஆடுகள் விற்றால் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு வாட்ச் வாங்க முடியும். நமது ஊரில் எவ்வளவு பிரமாதமாக இவர் ஆடு மேய்த்து இருந்தால் அந்த வாட்ச் வாங்க முடியும்?

ரகசியம் என்ன?

ரகசியம் என்ன?

அந்த ரகசியத்தை அண்ணாமலை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தால், நாங்கள் வாட்ச் வாங்காவிட்டாலும், எங்களது புள்ளை குட்டிகளை நன்றாக படிக்க வைத்து பார்த்துக் கொள்வோம். சிறப்பாக ஆடு வளர்த்த அண்ணாமலைக்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு சிறந்த ஆடு மேய்ப்பர் என்ற பட்டத்தை வழங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+