சம்மரில் இதுதான் பெரிய ட்விஸ்ட்.. கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி.. நடந்த மேஜிக்
திருப்பூர்: தமிழகத்தில் வெயில் அதிகரித்த போதிலும். சிக்கன் வாங்குவது தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. வழக்கத்தைவிட நுகர்வு அதிகரிப்பதால் கறிக்கோழி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. பல்லடம் பகுதி கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் என தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் கறிக்கோழி பண்ணைகள் பரவலாக எல்லா பக்கமும் இருக்கிறது என்றாலும் கொங்கு மண்டலத்தில் தான் கறிகோழி உற்பத்தி மிக அதிகமாக நடக்கிறது. பல்லடமும், நாமக்கல்லும் தான் விலையை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன.
சுமார் 25 ஆயிரம் பண்ணைகளில் தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டை தாண்டி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தமிழகத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை என்பது பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுவது . இந்த விலையானது கறிக்கோழி நுகர்வு ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படும். தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.95 வரை செலவாகும் நிலையில், கடந்த 6-ந் தேதி நிலவரப்படி ரூ.136 ஆக இருந்தது.
இந்தநிலையில் வருகிற 19-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற போகிறது.. இத்தேர்தலில் வெற்றி பெற தி.மு.க., அ.தி.மு.க., பாஜக, நாதக போன்ற கட்சிகள் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது வாக்கு சேகரிக்க கூட வரும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தினமும் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 போன்ற வகை உணவுகளை வழங்குவது அதிகமாக உள்ளது.
இது ஒருபுறம் எனில் சிக்கன் நுகர்வும் தமிழகத்தில் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கிறது. இதன் காரணமாக கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. அதன்படி கடந்த 24-ந் தேதி ரூ.111 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை(உயிருடன்) 27-ந் தேதி ரூ.120, 2-ந் தேதி ரூ.130, 4-ந் தேதி ரூ.134, 6-ந் தேதி ரூ.136 என உயர்ந்துள்ளது.
2 வாரத்தில் கிலோவிற்கு ரூ.25 அதிகரித்து உள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
தேர்தல் காரணமாக கறிக்கோழி நுகர்வு, அதிகரித்து தினமும் வழக்கத்தை விட சுமார் 3 லட்சத்திற்கு மேல் ஆர்டர் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு கிலோ கோழிக்கறி சென்னையில் 300 ரூபாய் என்கிற அளவில் விற்பனையாகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications