திருப்பூரில் பயனாளிகளுக்கு வேட்டி, சேலை மின்னல் வேகத்தில் ரெடி! 8 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் ஹேப்பி
திருப்பூர்: திருப்பூர் மக்கள் பொங்கல் தொகுப்பு பெற காத்திருக்கிறார்கள்.. தமிழக அரசு வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இலவச வேட்டி அல்லது சேலைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொங்கல் தொகுப்பு பரிசை பெறுவதற்கு திருப்பூர் ரேஷன்தாரர்கள் தயாராக உள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அதிகாரிகளும் காத்துள்ளனர்.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் கூடுதல் அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது.

பொங்கல் பரிசு ரூ.3000
விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், திருப்பூர் மாவட்டத்திலும் பொங்கல் பரிசு வாங்க பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்..
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரத்து 180 கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.. எனவே, ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் 8 லட்சம் மக்கள்
மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட இலவச வேட்டி-சேலைகள் ரேஷன் கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளதால், விநியோகப் பணிகள் விரைவில் துவங்கும் சூழல் உருவாகியுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 1,135 ரேஷன் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதி பெற்றுள்ளனர். இதில், அரிசி பெறும் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் சிறப்பு கார்டுதாரர்கள் அடங்குவர்.
இதில், பண்டிகை கால தேவையை கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு கூடுதலாக அரிசி, சர்க்கரை போன்ற பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை, கட்டுக்கட்டாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதே நேரத்தில், கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சி
வழங்கல் துறை அதிகாரிகள் சொல்லும்போது, "பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் விநியோகம் தொடங்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்..
அதேபோல தாலிக்கு தங்கம் தரும் பணிகளும் திருப்பூர் மாவட்டத்தில் விறுவிறுப்பாகி வருகின்றன.. கடந்த வாரம்கூட 2025-26ம் ஆண்டுக்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, திருமண நிதியுதவியும் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டன.
தாலிக்கு தங்கம்
இந்த மாவட்டத்தில் 74 பயனாளிகளுக்கு தலா எட்டு கிராம் வீதம், மொத்தம் 74 பவுன் தங்கம் வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படித்த பெண்களுக்கு தலா ரூ.25,000 எனவும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு தலா ரூ.50,000 எனவும், மொத்தமாக ரூ.32.25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பேசும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் 2021 முதல் 2025 வரை ஐந்து ஆண்டுகளில், 3,317 பயனாளிகளுக்கு தலா ஒரு பவுன் வீதம், மொத்தம் 26.536 கிலோ தங்கமும், ரூ.14 கோடியே 8 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications