Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆ".. ஆடைகளை களைந்து.. தோட்டத்தில் அந்த "கோலத்தில்" நின்ற பெண்கள்.. அதிர்ந்த இளைஞர்.. உறைந்த உடுமலை

அரை நிர்வாண கோலத்தில் நின்ற 2 பெண்களையும் போலீசார் கைது செய்து விசாரிக்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திடீரென 2 பெண்கள் ஆடைகளை களைந்து நின்றதை பார்த்து, அந்த இளைஞர் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்.. இப்படி ஒரு சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

உடுமலை ஜோத்தம்பட்டி பகுதியிலுள்ள சங்கர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது.. இங்கு தன்னுடைய மகளுடன் அவர் வசித்து வருகிறார்... சம்பவத்தன்று அவர் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத நேரத்தில், 4 பெண்கள் தோட்டத்திற்கு வந்திருக்கிறார்கள்.. அவர்களில் 2 பேர் தோட்டத்துக்கு வெளியே நின்றுகொண்டு, நோட்டம் போட ஆரம்பித்தனர்..

சந்தேகம்

சந்தேகம்

மற்ற 2 பெண்களும், அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்கள்.. அப்போது பக்கத்து தோட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர், இந்த பெண்களை பார்த்துவிட்டார்.. சந்தேகமடைந்த அந்த நபர், அப்பெண்களை நோக்கி சென்றுள்ளார்.. அவரை பார்த்ததுமே, காவலுக்கு நின்றிருந்த 2 பெண்களும், வீட்டுக்குள் திருட சென்ற 2 பெண்களுக்கு சிக்னல் தந்துவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர், வீட்டுக்குள் திருட சென்ற 2 பெண்களும் வெளியே வந்தனர்.. அவர்களிடம் இளைஞர், "நீங்கள் யார்? பூட்டிய வீட்டுக்குள் எப்படி போனீர்கள்" என்று விசாரித்துள்ளர்.

 அரை நிர்வாணம்

அரை நிர்வாணம்

உடனே அந்த பெண்கள் கடகடவென, தங்கள் ஆடைகளை களைந்துவிட்டு, அரை நிர்வாண கோலத்தில் நின்றுள்ளனர்.. பெண்கள் இப்படி திடீரென சேலைகளை அவிழ்த்து நிற்பதை பார்த்ததுமே அந்த இளைஞர் பதறிப்போய் அப்படியே நின்றுவிட்டார்.. இதை சாக்காக வைத்துக் கொண்டு, அந்த பெண்கள் கீழே அவிழ்த்து போட்ட தங்கள் ஆடைகளை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதற்குள் வீட்டின் உரிமையாளரான சங்கரும் அவரது மகளும் அங்கே வந்துவிட்டனர்.. தப்பி ஓடிய 2 பெண்களையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சங்கர் மடக்கி பிடித்தார்..

 நிர்வாண கோலம்

நிர்வாண கோலம்

உடனடியாக கணியூர் போலீஸுக்கும் தகவலை தந்தார்.. பெண் போலீசாருடன் அங்கு சென்ற சப் -இன்ஸ்பெக்டர் தனசேகரன், 2 பெண்களையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார்... இவர்கள் எல்லாருமே சேலத்தை சேர்ந்தவர்களாம்.. பிடிபட்டவர்கள், பார்வதி 32, மற்றும் சித்ரா 30, என்பது தெரிய வந்தது. இவர்கள் 4 பேரும் ஒரே க்ரூப்பை சேர்ந்தவர்கள்.. ஆட்கள் இல்லாத வீடுகளில் ஆட்டைய போடுவதுதான் இவர்களின் வேலையாம்.. இதற்காகவே பஸ் ஏறி கிளம்பி வருவார்களாம்.. பூட்டப்பட்ட வீடுகளை நோட்டமிட்டு திருடுவது உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் இவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது...

 களைந்த ஆடைகள்

களைந்த ஆடைகள்

குறிப்பாக தோட்டப்பகுதிகளையே குறிவைத்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.. இந்த பெண்கள் கும்பலாக கிளம்பி வரும்போது, தோட்டத்தில் கூலி வேலை செய்பவர்கள் என்று மற்றவர்கள் நினைத்து கொண்டுள்ளார்கள்.. திருடும்போது, அங்கிருக்கும் ஆண்களிடம் சிக்கிவிட்டால், இப்படித்தான் ஆடைகளை களைந்து அரைநிர்வாண கோலத்தில் நின்று, அவர்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு, அங்கிருந்து தப்பிவிடுவார்களாம்.. இப்போதைக்கு பிடிபட்ட 2 பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்... மற்ற 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+