Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரத்தாலியை சட்டுனு கழட்டிட்டு.. அத்தனை பேர் சுற்றிலும் நிற்க.. "கல்லும் கரைந்தது".. ஓ ப்ரியா ப்ரியா

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: 6 மாத காதல், ஒரு பெண்ணை ஸ்டேஷன்வரை கொண்டுவந்து விட்டுள்ள சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.. என்ன நடந்தது ப்ரியாவுக்கு?

திருப்பூர் பூண்டி ரிங்ரோட்டை சேர்ந்தவர் ப்ரியா.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவருக்கு 23 வயதாகிறது.. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இளைஞர் ஒருவருடன் பழக்கமாகி உள்ளது..

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஒற்றர்பாளையத்தை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. 29 வயதாகிறது.. டிரைவராக வேலை பார்த்து வருகிறார்... இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

6 மாத காதல்: இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்துவிடவும், ப்ரியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.. மகளுக்கு அறிவுரை சொன்னார்கள்.. கண்டித்தார்கள்.. ஆனாலும், ப்ரியா தன்னுடைய காதலில் உறுதியாக இருந்தார்.

Tiruppur girl left with her parents after taking off her thali in the Tiruppur police station

இந்நிலையில் கடந்த 17-ந் தேதி திடீரென விடிகாலையில், வீட்டை விட்டு ஓடிவிட்டார் ப்ரியா... கிளம்பி செல்லும்போது, பீரோவிலிருந்த 6 பவுன் நகைகளையும், ரூ.5 லட்சம் ரொக்க பணத்தையும் எடுத்துகொண்டு சென்றிருக்கிறார்.. மகளை வீட்டில் காணவில்லை என்றதும் பெற்றோர் பதறிப்போய் எங்கெங்கோ தேடி பார்த்தனர்.. மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனால், போலீசில் புகார் தந்தனர்.. போலீசாரும், அந்த புகாரின் பேரில் ப்ரியாவை தேடி வந்தனர்.

தாலி கட்டினார்: இதனிடையே, வீட்டை விட்டு வெளியேறிய, ப்ரியா, நேராக அன்னூருக்கு வந்துள்ளார்.. அங்கு தயாராக காத்துக் கொண்டிருந்த காதலன், அங்குள்ள கோவிலில் பிரியாவை அழைத்து சென்றார்.. கோயிலிலேயே தாலி கட்டி, திருமணமும் செய்து கொண்டனர்.. பிறகு, பெற்றோரால் ஏதாவது பாதிப்பு வந்துவிடும் என்று நினைத்து, காதலர்கள் 2 பேரும், அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் கேட்டு நுழைந்தனர்..

அவர்கள் யார் என்ன என்று போலீசார் விசாரித்தபோதுதான், ஏற்கனவே, திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் பெண்ணின் பெற்றோர் மகளை காணோம் என்று புகார் தந்திருப்பது தெரியவந்தது.

கதறல் கதறல்: இதையடுத்து அன்னூர் போலீசார் காதலர்கள் 2 பேரையும், திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கே அனுப்பி வைத்தனர்... உடனே அங்கிருந்த போலீசார், ப்ரியாவின் பெற்றோருக்கு தகவல் தந்து அவர்களையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். ஸ்டேஷனுக்குள் வந்ததுமே, இளைஞருடன் மகள் தாலி கட்டி நிற்பதை பார்த்து, கதறி கதறி அழுதார்கள்.. பிரியாவிடம் நெருங்கி சென்று, பெற்றோர் மனம் உருக பேசினார்கள்..

"எப்படியெல்லாம் உன்னை வளர்த்தோம்... செல்லம் கொடுத்து வளர்த்தோமே.. கேட்டதை எல்லாம் வாங்கி தந்தோமே.. ஏதாவது குறை வைத்திருக்கிறோமோ? அப்படி இருக்கும்போது, நீ இப்படி செய்யலாமா? என்று கண்ணீர் விட்டு கதறினார்கள்.. பிரியாவிடம் கெஞ்சி கெஞ்சி பாசப்போராட்டத்தை நடத்தினார்கள்.. இதெல்லாம் பார்த்து பிரியா, அமைதியாக நின்று கொண்டிருந்தார்.. எதுவுமே பதில் சொல்லவில்லை..

ஆனால், பெற்றோர் தொடர்ந்து, மகளை இழக்க மனமில்லாமல் தொடர்ந்து கண்ணீரிலேயே பாசத்தை பிழிந்தனர்.. இறுதியில் மெல்ல மெல்ல பிரியாவின் மனம் இளகியது.. கரைந்தது.. உருகியது..

உருகிய உள்ளம்: நான் காதலனை விட்டுவிட்டு, உங்க கூடவே வந்துடறேன்.. ஆனால், அவரை விட்டுடுங்க.. நகை, பணத்தை வீட்டிலிருந்து எடுத்துச் சென்றது நான்தான்.. அவர் மீது கேஸ் எதுவும் போடாதீங்க.. அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டோம் என்று உறுதி தந்தால், இப்பவே உங்களுடன் வருகிறேன் என்றார்..

மகள் தங்களுடன் வந்தால் போதும் என்று நினைத்த பெற்றோரும், இதற்கு சம்மதித்தனர்.. இதையடுத்து பிரியா, அங்கிருந்த போலீசாரிடம், நான் என்னுடைய அம்மா, அப்பா கூடவே போகிறேன் என்று சொன்னார்.. பிறகு, காதல் கணவன் கட்டிய தாலியை, கழுத்தில் இருந்து கழற்றி, அவரிடமே தந்துவிட்டு, பெற்றோருடன் கிளம்பி சென்றுவிட்டார் பிரியா.. இதையடுத்து போலீசார் இளைஞருக்கு அறிவுரைகளை சொல்லி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்... நடந்ததையெல்லாம் நினைத்து, மனம்கலங்கிப்போய் வெளியேறினார் அந்த இளைஞர்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+