பிரபல விஐபி.. அம்பலமான திருப்பூர் சத்யா அந்தரங்கம்.. இத்தனை பேரா? தமிழ்ச்செல்விக்கு ஜாமீன் மறுப்பு
திருப்பூர்: தாராபுரம் சத்யா கைதாகி சிறையிலிருக்கும் நிலையில், அவரது உடந்தையாக இருந்தவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.. என்ன நடந்தது?
கொடிமுடியை சேர்ந்த, 30 வயதான சத்யா என்ற பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.. ஒரு பெண் குழந்தையும் உள்ளது.. ஆனாலும், திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து, அவர்களை திருமணம் செய்து ஏமாற்றி பணம், நகை மோசடிகளை செய்திருக்கிறார்.

பேக்கரி ஓனர்: இதில் கடைசியாக சிக்கியவர் தாராபுரத்தை சேர்ந்த 30 வயது பேக்கரி ஓனர்.. இவருக்கு மேட்ரிமோனியில் சத்யாவின் அறிமுகம் கிடைக்கவும், அவருடன் நட்பாகி உள்ளார்.. அவரையே திருமணம் செய்யவும் முடிவெடுத்துள்ளார்.. சத்யாவும், தனக்கு ஏற்கனவே கல்யாணமானதை மறைத்து, பேக்கரி ஓனரை திருமணம் செய்துள்ளார்.
திருமணமான ஒருசில நாட்களில், சத்யா பெயரை ரேஷன் கார்டில் பதிவதற்காக முனைந்தபோதுதான், "கணவர்" என்று ஏற்கனவே ஒருவரது பெயர் பதிவாகியிருந்ததை கண்டு பேக்கரி ஓனர் நிலைகுலைந்து போனார். இதனால் சந்தேகமடைந்த அவர், சத்யா குறித்து கொடிமுடிக்கே நேரடியாக சென்று விசாரித்தபோதுதான், அவர் ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறித்து வந்தது தெரியவந்தது.
இளைஞர்கள்: குறிப்பாக, ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னை என பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டிஎஸ்.பி, சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத இளைஞர்கள், தொழிலதிபர்கள் , அரசியல்வாதிகள், ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவரைகள் என 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், லட்சக்கணக்கில் இவர்களிடம் நகை, பணத்தை சத்யா பறித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதையடுத்து, தாராபுரம் மகளிர் போலீசில் பேக்கரி ஓனர் புகார் தரப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த சத்யாவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இறுதியில் புதுச்சேரியில் தன்னுடைய தோழி வீட்டில் பதுங்கியிருந்த சத்யாவை சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
தனிமை சந்திப்பு: அப்போது நடத்திய விசாரணையின்போது, பல்வேறு தகவல்கள் போலீஸ் தரப்பிலிருந்து வெளியாகியிருந்தன.. அதாவது, மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள செல்போன் நம்பர் மூலம் தன்னை தொடர்பு கொள்ளும் ஆண்களை, சத்யா தனிமையில் சந்தித்து பேசுவாராம்.. அவர்களுடன் நெருங்கி பழகி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் பணம், நகை கேட்டு மிரட்டுவாராம். சிலரது சொத்துக்களையும் எழுதி வாங்கியிருக்கிறாராம் சத்யா.
ஆன்லைன்: சத்யா கைது செய்யப்பட்ட பிறகு, அவரால் பாதிக்கப்பட்ட ஆண்கள் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் தாராபுரம் போலீசில் புகார் தந்துள்ளதாக தெரிகிறது. சத்யா மீது நடவடிக்கை எடுப்பதுடன், தாங்கள் கொடுத்த நகை-பணத்தை மீட்டு தருமாறும் அந்த புகாரில் கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம். எனவே, சத்யா பயன்படுத்திய செல்போன்களில் ஆபாச படங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்ற ஆய்விலும் போலீசார் இறங்கியிருப்பதாக செய்திகள் வட்டமடித்தன.
அதேபோல, சத்யாவுடன் நிழல்போல ஒட்டிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வி என்பவரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். காரணம், பேக்கரி ஓனர் மகேஷூக்கும், சத்யாவுக்கும் திருமணத்தை நடத்தி வைத்ததே இந்த தமிழ்ச்செல்விதானாம்.. இவர் சத்யாவின் உறவினர் என்றும் சொல்கிறார்கள். இவரை பிடித்து விசாரித்தால்தான், சத்யாவால் எத்தனை ஆண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்? நகை, பணம் குறித்த விவரம் தெரியவரும் என்பதால், தமிழ்ச்செல்வியையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
தள்ளுபடி: ஆனால் தமிழ்ச்செல்வி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.. இந்நிலையில், இந்த வழக்கில், தனக்கு முன்ஜாமின் கோரி, தமிழ்செல்வி மனுத்தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனுவானது, நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, மகேஷ் தரப்பில் வழக்கறிஞர் ஹரிஷ்குமார் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications