முளைச்சு மூணு இலை விடல.. 14ஐ திருமணம் செய்த 16.. ஆடிப்போன திருப்பூர் தாத்தா.. காஞ்சிபுரம் பையன் யார்
திருப்பூர்: தமிழகத்தில் மீண்டும் பெண் குழந்தை திருமணங்கள் அதிகரிக்க தொடங்கியிருக்கின்றன.. எனவே இது தொடர்பான விழிப்புணர்கள் மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் வேறு ஒரு சம்பவம் நடந்து அதிர்ச்சியை தந்துள்ளது.
பல வருடங்களுக்குமுன்பு இந்தியா முழுவதிலும் குழந்தை திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வந்தன.. இதற்கு பிறகுதான், குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டங்களும், அதுதொடர்பான விழிப்புணர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதற்குபிறகு குழந்தை திருமணங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.. எனினும் முற்றிலும் ஒழியவில்லை. கல்வியறிவு குறைவாக உள்ள மாவட்டங்களில் இன்னமும் குழந்தை திருமணம் செய்யும் போக்கு நடந்து வருகிறது.
அதிகரிக்கும் பெண் குழந்தை திருமணங்கள்
பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதால், அவர்களது சமூக வாழ்க்கை சீரழிந்து, அடிப்படை உடலியல் ஆரோக்கியமும் கெட்டுப்போய்விடுகின்றன. ஒரு குழந்தையே, இன்னொரு குழந்தையை பெற்றெடுக்கும் நிலைமை ஏற்படுவதால், பிறக்கும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் பிறக்கின்றன.
இதனால் கருவுற்ற குழந்தையும் பாதிப்புகளுக்கு உண்டாகும் அபாயமும் ஏற்படுகின்றன.. அல்லது அது பெண் சிசு கொலைக்கும் துணிந்துவிடுகிறார்கள். விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி போன்றவை
பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு
பெண்சிசு கொலை அதிகமாக நடைபெறும் மாவட்டங்களாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சென்னை மாவட்டங்களில் கடந்த வாரம்கூட குழந்தை திருமணங்கள் நடந்தன.
இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு சம்பந்தப்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்களோ பிரதான காரணமாக இருக்கிறார்கள். எனவே, பெற்றோர்கள் மீதுதான் வழக்கு முதன்மையாக பதியப்படுகிறது.
பெற்றோர் செய்யும் அபாயம் தெரியாமல் பெண் குழந்தைகள் திருமண பந்தத்தில் சிக்கி கொள்வது ஒருபுறமிருந்தால், சில பெண் குழந்தைகள், வீட்டிற்கு தெரியாமல் வலிய சென்று திருமணத்தை செய்து கொள்கிறார்கள். அந்தவகையில், காஞ்சிபுரத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.
திடீர் காதல் - திடீர் கல்யாணம்
திருப்பூர் மாவட்டம், ஆலங்காடு பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு 14 வயதாகிறது.. தாய், தகப்பனை இழந்த இந்த சிறுமி, தன்னுடைய தாத்தாவுடன் வசித்து வந்தார்.. சமீபகாலமாக இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பழக்கமானான்.. இந்த 16 வயது சிறுவனும், 14 வயது சிறுமியும் காதலிக்க துவங்கினார்கள்.
பிறகு, கடந்த பிப்ரவரி மாதம், திருப்பூர் மாவட்டத்திலுள்ள தன்னுடைய வீட்டில் இருந்து சிறுமி வெளியேறிவிட்டாள்.. 2024ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி காஞ்சிபுரத்திற்கு அந்த சிறுவனை தேடி வந்திருக்கிறார்.. பிறகு காஞ்சிபுரத்திலேயே சிறுவனும், சிறுமியும் திருமணம் செய்து கொண்டனர்.. இதற்கிடையில் திருப்பூரில் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.
போக்சோவில் வழக்கு பதிவு
இந்த தகவல் சிறுமிக்கு தெரிய வரவும் , மார்ச் மாதம் தாத்தாவை பார்க்க சிறுமி, திருப்பூர் சென்றிருக்கிறார்.. அப்போதுதான், சிறுமிக்கு திருமணமான விஷயமே தாத்தாவுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துவிட்டார். பிறகு இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் அளித்த புகாரின்படி, திருப்பூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பூரில் இது சம்பந்தமான விசாரணையும் முடிந்துள்ள நிலையில், தற்போது இந்த வழக்கை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர். காஞ்சிபுரத்தில் சிறுமிக்கு திருமணம் நடந்ததால், இந்த வழக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இனிமேல்தான் 2 குழந்தைகளிடமும் விசாரிப்பார்கள் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications