காதல் மனைவியின் முடிவால் கணவன் செய்த காரியம்! நிற்கதியாய் நிற்கும் குழந்தைகள்! கனவிலும் நடக்க கூடாது

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அருகே உடுமலையில் காதல் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காமல், கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கணவர் மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களது இரண்டு குழந்தைகளும் நிற்கதியாய் நின்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் உடுமலை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காதல் மனைவி மீது வைத்த பிரியத்தால், வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரத்தை இங்கு பார்க்கலாம்.

tirupur love police

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ராகல்பாவி ஊராட்சி ஆர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சீத்தா செல்வராஜ் (வயது 34). இவருக்கும் பக்கத்து ஊரான முக்கோணம் பகுதியை சேர்ந்த அபிநயா(27) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். உயிருக்கு உயிராக காதலித்து வந்த இவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள ஜாதி ஒரு தடையாக இருந்துள்ளது.

காதல் திருமணம்

சீத்தா செல்வராஜ் வீட்டிலும் பெண் பார்க்க ஆரம்பித்ததால், தான் காதலிக்கும் பெண் பற்றி பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதேபோன்று அபிநயாவும் தன் காதல் விவகாரம் குறித்து பெற்றோரிடம் கூறியிருக்கிறார். ஆனால் இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால், திருமணத்திற்கு பெண் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சீத்தா செல்வராஜ் அபிநயாவை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து இருவரும் சீத்தா செல்வராஜின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். நாட்கள் ஓடிய நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது இந்த தம்பதிக்கு சிவிகா என்ற 9 வயது பெண்ணும், சர்வேஷ் என்ற 6 வயது மகனும் இருக்கிறார்கள். சமீபத்தில் சீத்தா செல்வராஜ்ஜுக்கு பட்டுக்கோட்டை பகுதியில் கோழிப்பண்ணையில் உற்பத்தி மேலாளர் பணி கிடைத்தது.

குளிக்க சென்ற அபிநயா

இதனால் குடும்பத்தினரை விட்டு தங்கி வேலை பார்த்து வந்தார். வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே வீட்டுக்கு வந்து சென்றார். இந்த நிலையில் மனைவி அபிநயா தீராத வயிற்று வலி காரணமாக அவதி அடைந்து வந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்து வந்தார். இந்த நிலையில் நாளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக நேற்று செல்வராஜ் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது காலையில் குளிக்க செல்வதாக சென்ற அபிநயா, நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை தட்டி திறந்து பார்த்ததில், அபிநயா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வராஜ் கதறி அழுதார். அம்மா இறந்த சோகத்தில் குழந்தைகளும் கதறி அழுதனர். காதல் மனைவி விட்டு சென்றதை நினைத்து செல்வராஜும் துடித்து போனார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கணவரும் தூக்கிட்டு தற்கொலை

அதன்பேரில் வீட்டுக்கு வந்த போலீசார், அபிநயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் வைத்தும் சீத்தா செல்வராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் திடீரென அவரும், மருத்துவமனையின் மோட்டார் ரூமுக்கு சென்று அங்கு தூக்கில் தொங்கினார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த முடிவை எடுத்ததால், கழுத்து இறுகி செல்வராஜ் உயிரிழந்தார்.

சிறிது நேரம் கழித்து தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை போலீசார் கவனித்துள்ளனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு அந்த ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

நிற்கதியான குழந்தைகள்

ஏற்கனவே தாய் இறந்த துக்கத்தில் தவித்த குழந்தைகள், இனி நம் அப்பா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று எண்ணியிருந்த நிலையில் அவரும் அடுத்த சில மணி நேரங்களில் உயிரை மாய்த்துகொண்டதால், இனி என்ன செய்வதென்றே தெரியாமல் ஆஸ்பத்திரியில் நிற்கதியாக நின்ற அந்த 2 குழந்தைகளை பார்த்து அங்கிருந்தவர்கள் கண்கலங்கினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+