டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் எழுதுவோருக்கு குட்நியூஸ்.. திருப்பூர் கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு
திருப்பூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள, டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கான முதன்மை தேர்விற்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்டத்தில் நடந்து வந்தது. இங்கு விரைவில் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு மாணவ மாணவியருக்கு அழைப்பு விடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான மாதிரி தேர்வு வரும் அக்டாபர் 18-ந்தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் 18-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

தேர்வுக்கு மாணவா்கள் தயாராகும் வகையில் வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) குரூப்-2 ஏ முதல் மாதிரித் தேர்வு கலெக்டர் அலுவலகத்தில், 4-வது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அறை எண் 439-ல் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வுகள் டி.என்.பி.எஸ்.சி. முதன்மை தேர்வு நடைபெறும் வரை தொடர்ந்து நடைபெறும்.
குரூப்-2 மற்றும் 2 ஏ எழுதிய மாணவ-மாணவியர்கள் இந்த இலவச மாதிரித் தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த மாதிரித் தேர்வில் கலந்துகொள்ள https://forms.gle/TivZf8yk4ZzBEntUA என்ற கூகுள் லிங்கில் பதிவுசெய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9499055944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
குரூப் 4 காலிப்பணியிடங்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்: குரூப் 4 காலிப்பணியிடங்கள் குறித்து சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி கடந்த 3 நாட்களுக்கு முன்பு விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், "2022 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
2024 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.எனவே 2024 ம் ஆண்டு தொகுதி IV தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன.எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு டிஎன்பிஎஸ்சி கூறியிருந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications