திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனிதநேயம்.. ஆதரவற்றவர்களுக்கு சொந்த செலவில் உணவு, தண்ணீர்.. அசத்திய திருப்பூர் இன்ஸ்பெக்டர் ஜோதிமணி

Google Oneindia Tamil News

திருப்பூர்: ஆதரவற்றவர்கள் மற்றும் பிளாட்பாரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கி திருப்பூர் இன்ஸ்பெக்டர் ஜோதிமணி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை கையில் எடுத்துள்ளது.

லட்சத்தீவுகளில் ஒடுக்குமுறை- மத்திய அரசு பிரதிநிதி பிரபுல் பட்டேலை திரும்பப் பெற சீமான் வலியுறுத்தல்லட்சத்தீவுகளில் ஒடுக்குமுறை- மத்திய அரசு பிரதிநிதி பிரபுல் பட்டேலை திரும்பப் பெற சீமான் வலியுறுத்தல்

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடந்த 24-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. 31-ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

முழு ஊரடங்கு

முழு ஊரடங்கு

இந்த முழு ஊரடங்கில் மருந்தகங்கள், பால் விநியோகம் உள்ளிட்ட மிக அத்திவாசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள் இயங்கவும்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் சேவை

போலீசாரின் சேவை

முழு ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்கள பணியாளர்களாக உள்ள போலீசார் மக்களை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக இரவு, பகல் பாராது சேவை புரிந்து வருகின்றனர். அதுவும் கொரோனா காலத்தில் மக்களுக்காக கடமை உணர்வுடன் பணியாற்றும் பெண் போலீசாருக்கு ராயல் சல்யூட் அடிக்கலாம்.

இன்ஸ்பெக்டர் வி.ஜோதிமணி

இன்ஸ்பெக்டர் வி.ஜோதிமணி

இத்தகைய போலீசார் பட்டியலில் இடம்பிடித்துள்ள திருப்பூர் நகரம் சிறுவர் கடத்தல் தடுப்பு பிரிவு
போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.ஜோதிமணி, ஆதரவற்றவர்கள் மற்றும் பிளாட்பாரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கி அனைவரையும் கவர்ந்துள்ளார். முழு ஊரடங்கு காரணமாக திருப்பூர் நகர எல்லை, பழைய பஸ்ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள் உணவு இல்லாமல் தவித்து வந்தனர்.

உணவு பொட்டலங்கள் வழங்கினார்

உணவு பொட்டலங்கள் வழங்கினார்

ஊரடங்கை கண்காணிக்க ரோந்து பணி சென்ற இன்ஸ்பெக்டர் ஜோதிமணி, இவர்களின் நிலை கண்டு கண் கலங்கினார். இதனை தொடர்ந்து உடனடியாக தனது சொந்த பணத்தில் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் வாங்கிய ஜோதிமணி, தனது கையினாலே அதனை அவர்களுக்கு கொடுத்தார். இதுபோல் சுமார் 100 உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கி அவர்களின் பசியாற்றினார் இந்த மனிதநேய பெண் காவலர். இந்த மனிதநேய புனிதவதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

English summary
Tirupur Inspector Jyoti Mani has captivated everyone by providing food and bottled water to the helpless and beggars on the platform
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X