திருப்பூரில் எந்த தந்தையும் செய்யக்கூடாத அசிங்கம்.. சிறையில் தள்ளிய தாய்க்கு என்னாச்சு தெரியுமா?
திருப்பூர்: கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த குமாருக்கு கடந்த 15 வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் முருகேஸ்வரி. இவர்கள் திருப்பூரில் நல்லூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். குமார் தனது சொந்த மகளிடமே அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மனைவி, போலீசில் புகார் அளித்தார். அதனால் சிறை சென்ற குமார், ஜாமீனில் வந்து, மனைவியை என்ன செய்தார் தெரியுமா? இந்த சம்பவம் போலீஸையே ஆடிப்போக வைத்துள்ளது.
பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் ஆண்கள் பல பகுதிகளில் சுற்றுகிறார்கள். உறவினராக, நண்பராக, தாத்தாவாக, மாமாவாக, சித்தப்பாவாக, அண்ணன் முறை என சொந்த உறவுகள்,அண்டை வீட்டார் என யார் வேண்டுமானாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் அத்துமீறிலில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சொந்த தந்தையே மகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட கேவலமான சம்பவத்தை மிக அபூர்வமாகவே கேள்விப்பட்டிருப்போம்.. அப்படி ஒரு சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது. அதற்கு எதிர்வினையாற்றிய மனைவிக்கு என்னாச்சு தெரியுமா? மனதை உலுக்கும் சம்பவம் பற்றி பார்ப்போம்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த 35 வயதாகும் குமார் என்பவருக்கும் திருப்பூர் முதலிபாளையம் பகுதியை சேர்ந்த 33 வயதாகும் மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கும் 2 மகன் மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குமார் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மகேஸ்வரி திருப்பூர் மாவட்டம் நல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த குமார், தனது மனைவியை சந்தித்து, தான் மனம் திருந்தி விட்டதாகவும், ஒன்றாக சேர்ந்து குழந்தைகளுடன் வாழ ஆசைப்படுவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் மகேஸ்வரி என்னை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டி உள்ளார். ஆனாலும் மகேஸ்வரி தனது முடிவில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையானது வாக்குவாதமாக முற்றியது. இதையடுத்து ஆத்திரத்தில் இருந்த குமார் வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து மகேஸ்வரியின் கழுத்தில் வெட்டினாராம். இதில் வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே குமார் திருப்பூர் வடக்கு போலீசில் சரணடைந்துள்ளார். அவரை நல்லூர் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications