திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காத திருப்பூர் மீன்சந்தையில் பொதுமக்களுக்கு இனி அனுமதி இல்லை

Google Oneindia Tamil News

திருப்பூர்: தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் இயங்கிய திருப்பூர் தென்னம்பாளையம் மீன்சந்தை நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

திருப்பூர் தென்னம்பாளையம் மீன் சந்தையில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானோர் தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் இங்கு குவிந்தனர்.

Trippur Fish market will be closed for public from tomorrow

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் தற்போது பச்சை மண்டலத்தில் இருக்கிறது திருப்பூர். இந்த நிலையில் தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூடுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்பூர் தென்னம்பாளையம் மீன்சந்தை நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

Trippur Fish market will be closed for public from tomorrow

மேலும் மொத்த, சில்லறை வியாபாரிகள், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மீன்களை விற்பனை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய கடைகள் புதிய கடைகள் எல்.ஆர்.ஜி. மைதானம், நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

Trippur Fish market will be closed for public from tomorrow

Recommended Video

    கொரோனா சென்னையை மீட்டெடுக்க நாமே தீர்வு திட்டம் - தன்னார்வலர் மக்கள்‌ படை - கமல்ஹாசன்

    தனிநபர் இடைவெளின்னா என்ன விலை என கேட்கும் திருப்பூர் மீன் சந்தை- அலைமோதிய ஆயிரக்கணக்கான ஜனக் கூட்டம்தனிநபர் இடைவெளின்னா என்ன விலை என கேட்கும் திருப்பூர் மீன் சந்தை- அலைமோதிய ஆயிரக்கணக்கான ஜனக் கூட்டம்

    இந்த இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க அனைவரும் கட்டாயம் குடையும் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Trippur Thennampalayam Fish market will be closed for public from tomorrow
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X