செந்தில் பாலாஜியை பார்க்கவே கஷ்டமா இருக்கு.. உடல்நலனோடு அவர் சீக்கிரம் வெளியே வரணும்: டிடிவி தினகரன்
திருப்பூர்: சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது செந்தில் பாலாஜியை பார்த்தால் வருத்தமாக உள்ளது. செந்தில் பாலாஜி நல்ல உடல் நலத்தோடு வெளியே வர வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை சென்னை புழல் சிறையில் தான் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார்.

மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஜனவரி 12ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. ஆறு மாத காலமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருப்பூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமமுகவின் முன்னணி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், "செந்தில் பாலாஜி எனது பழைய நண்பர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே எங்களுடன் பயணித்தவர். அமமுகவிலும் என்னுடன் இணைந்து பயணித்துள்ளார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப் போல செந்தில் பாலாஜிக்கு நடந்துள்ளது. பாவம் அவர்.
சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது அவரை பார்த்தால் ஒரு நண்பராக தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து நல்ல உடல் நலத்தோடு வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களின் பிரார்த்தனை" எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய டிடிவி தினகரன், "சில கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து நாங்கள் அறிவிப்போம். வன்னியர்களை ஏமாற்றியது போல எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களை ஏமாற்ற பார்க்கிறார். சிறுபான்மையின மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. எடப்பாடி பழனிசாமி போடும் வேடமெல்லாம் சிறுபான்மையின மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் தக்க பாடம் புகட்டுவார்கள். எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுப் பேர்வழி என எல்லோருக்கும் தெரியும். தான் முதல்வர் பொறுப்புக்கு வர காரணமாக இருந்தவர்கள் முதுகிலேயே குத்தியவர் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியை தொடர உதவியாக இருந்தவர்கள் முதுகில் குத்தினார். அனைத்திற்கும் மேல் தங்களை பாதுகாத்தவர்கள் முதுகில் குத்தும் வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்." என விமர்சித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications