காங்கிரஸ் உதவியுடன் மாநில கட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமர்.. டிடிவி தினகரன் பொளேர்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் மாநிலக் கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மற்றும் 18 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அமமுக கேட்ட குக்கர் சின்னத்துக்கு பதிலாக தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.

TTV Dinakaran says about who will be the Prime Minister of India?

இந்த சின்னத்தை வைத்து தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் 59 அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் திருப்பூரில் அமமுக வேட்பாளர் எஸ்.ஆர். செல்வத்தை ஆதரித்து டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய தினகரன் காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் மாநிலக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது.

எந்த தேசிய கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மாநில கட்சிகளே பிரதமரை தேர்வு செய்யும் என்றார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அமமுகவினர் கை காட்டும் நபர்தான் பிரதமர் என கூறிவந்தார். அதற்கேற்ப தமிழகம் மற்றும் புதுவையில் தனித்து போட்டியிடுகிறது அமமுக.

மேலும் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றால் அக்கட்சிக்கு தினகரன் ஆதரவு தெரிவிப்பார் என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+