Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர், நாமக்கல்லில் அதிசயம்.. 10ம் வகுப்பு தேர்வில் 'இரண்டு' இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர் : 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்று இரண்டு இரட்டை சகோதரிகள் அசத்தி உள்ளனர். திருப்பூரிலும், நாமக்கல்லிலும் இந்த சாதனை நடந்திருக்கிறது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடைந்தது. 4107 மையங்களில் சுமார் 9 லட்சம் பேர் பொதுத் தேர்வை எழுதி இருந்தனர்.

Two twin sisters have scored the same marks in class 10 general examination in Tamil Nadu

இந்தநிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதியான இன்று காலை வெளியாகியது. மாணவர்கள் மதிப்பெண் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களான dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in மூலம் அறிந்து கொண்டனர். மேலும் எஸ்எம்எஸ் மூலமாக மாணவர்கள் மதிப்பெண் விவரங்களை அறிந்து கொண்டனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதிய நிலையில், 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். மொத்தம் 4, 105 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதாக அரசு அறிவித்தது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதேநேரம் கடந்த ஆண்டை விட தேர்ச்சி அதிகமாக இருந்தது.

தமிழ்நாட்டிலேயே 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் 97.31 % தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது. சிவகங்கை மாவட்டம் இரண்டாவது இடமும், ராமநாதபுரம் மாவட்டம் 3 வது இடமும் பிடித்தது. தமிழ்நாட்டிலேயே தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பிடித்தது. ஒட்டுமொத்தமாக பார்க்கும், வேலூர் ஜில்லாவில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் தான் தேர்ச்சி விகிதத்தில் சரிவை சந்தித்து இருந்தன.

தமிழ்நாட்டில் மொத்தம் 1364 அரசு பள்ளிகள் 100 % தேர்ச்சி பெற்றிருந்தது. இந்த தேர்வில் ஏராளமான ஏழை மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி காவிய ஜனனி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார். கூலி தொழிலாளி மகளான மாணவி காவிய ஜனனி ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மண்டவாடி புதூர் கிராமத்தை சேர்ந்த காவ்யாஸ்ரியா என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியில் ஆகிய 4 பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஒட்டன்சத்திரம் அக்ஷயா அகாடமி பள்ளியில் படித்த மாணவியான இவரது தந்தை கருப்புச்சாமி விவசாயி. தாய் ரஞ்சிதம் குடும்பத்தலைவியாக உள்ளார். இதனிடையே திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளி மாணவியான சஞ்சனா அனுசும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்துள்ளார். இவர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

அண்மையில் வெளியான 12 ம் வகுப்பு தேர்வில் இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தி இருந்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தை சேர்ந்த செல்லப்பா சவிதா தம்பதியின் இரட்டை குழந்தைகளான நிர்மல் , நிகில் விக்டரி மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தனர். இதில் இரட்டையர்கள் இருவரும் 478 மதிப்பெண்கள் பெற்றனர். ஒன்றாக பிறந்த இரட்டையர்கள் உருவத்திலும், செயலிலும் ஒன்றாக செயல்படுவார் என்கிற நிலையில், இரட்டை சகோதரர்கள் ஒரே மதிப்பெண் 12 ம் வகுப்பு பொது தேர்வில் பெற்று சாதனை படைத்தனர்.

அதே பாணியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரட்டையர் சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தி உள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த ரமேஷ்யுவராஜா (45), கலைராணி(41) என்ற தம்பதிக்கு அட்சயா (16),அகல்யா(16) என இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள். இரட்டை சகோதரிகள் ராசிபுரத்தில் உள்ள தனியார் வித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அட்சயா, அகல்யா இரட்டையர்கள் (463/500) இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர். ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், சக மாணவிகள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

இதேபோல் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் (484/500) பெற்று இரட்டையர் சகோதரிகள் எம்.ஹரிணி மற்றும் எம்.சபரி ஸ்ரீ ஆகியோர் சாதித்து காட்டியுள்ளனர். சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து படிப்பில் இருவரும் ஒரே மதிப்பெண் பெற்று தாய்க்குப் பெருமை சேர்த்ததுள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+