இந்தியாவில் தலைகீழ் மாற்றம்! 2025ல் பாருங்க.. நாடு இப்படித்தான் இருக்கும்.. எல்.முருகன் நம்பிக்கை
திருப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவோம் என்று தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் நாடு வரும் 2025ம் ஆண்டுக்குள் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் 2025ம் ஆண்டில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டுமெனில் பாஜக ஆட்சியில் இருப்பது அவசியமாகும். எனவே இந்த தேர்தல் பாஜகவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது.

இதில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறை அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமரானவர் என்கிற பெருமையை மோடி பெறுவார். எனவே இந்த தேர்தலுக்கு பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து பணியாற்றி வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்த அளவில் 9 நாடாளுமன்ற தொகுதிகளை பாஜக குறிவைத்திருக்கிறது. இதற்கான பட்டியல் ஏற்கெனவே மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் அமித்ஷா போன்ற முக்கிய அமைச்சர்கள் பிரசாரங்களை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கடந்த 9 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளை விளக்கி கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.
அப்போது பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "கடந்த காலங்களில் காங்கிரஸ், திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை, 9 ஆண்டுகளில் பாஜக மோடி அரசு மக்களுக்கு செய்து தலைசிறந்த நாடாக இந்தியாவை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் 2ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி ஊழல் என தொடர்ந்தது. மட்டுமல்லாது, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமைச்சரை முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க மறுக்கிறார்.
டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கி, கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் நேரடியாக சென்றடையும் வகையில் வங்கி கணக்குகளை ஏற்படுத்தி, மானியத்தை வழங்கியது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிதான். கடந்த 9 ஆண்டுகளில் பாஜக செய்த மிகப்பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்று.
ஏழை, எளிய மக்களுக்காக ரூ.5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு, புதிய தேசிய கல்விக் கொள்கை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை பாஜக செய்து கொடுத்திருக்கிறது. குறிப்பாக 9 புதிய ரயில் தடங்கள் மற்றும் தொழில் முனைவோருக்காக பிஎம் மித்ரா திட்டம், தமிழகத்துக்கு என ஒரு தொழில் பூங்காவையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலக அளவில் இந்தியா தற்போது 5வது பொருளாதார நாடாக உள்ளது. இதே 2025ம் ஆண்டில் நாடு 3வது பொருளாதார நாடாக உருவாகும். உலக நாடுகளே இந்தியாவை எதிர்நோக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறார் மோடி. ஐ.நா சபையில் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று முழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர். தொடர்ந்து மக்களுக்கு மோடி அரசு சேவை செய்ய 2024 மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும்" என்று பேசினார்.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications