திருப்பூரே கோலாகலம்! பதவியேற்று முதல் முறையாக இன்று தமிழகம் வரும் சி.பி. ராதாகிருஷ்ணன்! என்ன பிளான்
திருப்பூர்: துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றபிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் 4 நாள் பயணமாக இன்று முதன்முறையாக தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் தொழில்துறையினர் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி திருப்பூரில் கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 12ம் தேதி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர், திருப்பூர் சந்திராபுரம் ஆகும். அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தன்னுடைய சொந்த ஊரான திருப்பூருக்கு இன்று செவ்வாய்க்கிழமை வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை ஏர்போர்ட்டுக்கு காலை 10 மணிக்கு வருகிறார்.
கோவை கொடிசியா வளாகத்தில் தொழில்துறையினர் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். அதன்பிறகு கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து பேரூர் தமிழ் கல்லூரியில் நடக்கிற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
ஷெரீப் காலனி வீடு
பிறகு சாலை மார்க்கமாக கார் மூலம் மாலை 5 மணிக்கு அவர் திருப்பூர் வருகிறார். இதைத்தொடர்ந்து திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் சிலை, மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
இதையடுத்து, பிச்சம்பாளையத்தில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார். பின்னர் நாளை அதாவது புதன்கிழமை காலை சந்திராபுரத்தில் உள்ள தனது குலதெய்வமான பாலைமரத்து அய்யன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து திருப்பூர் வரும் அவர், ஷெரீப் காலனியில் உள்ள தனது
வீட்டுக்கு சென்று தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார்.
குலதெய்வம் கோயில்
இதனை தொடர்ந்து தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு தொழில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் நடத்தப்படவுள்ள பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார்..
நாளை மறுநாள் 30ம் தேதி மதுரைக்கு வருகிறார். அங்கு துணை ஜனாதிபதிக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கிறார்கள். மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் அவர், முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று மரியாதை செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மதுரை திரும்பும் அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு 7.20 மணிக்கு சுவாமி தரிசனம் செய்கிறார்.
ட்ரோன்கள் பறக்க தடை
அதன் பிறகு மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி கோவை, திருப்பூர், மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கையாக குடியரசு துணை தலைவர் செல்லும் பகுதிகளில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து கலெக்டர் மனீஷ் உத்தரவிட்டுள்ளார்.
பதவியேற்ற பிறகு முதன் முறையாக 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். சென்னை மற்றும் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாலும் சிறப்பான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications