Viral Video: பொன்னாங்கண்ணி சட்டையை இழுத்துக் கிழித்த முரளி.. மப்பு ஆசாமியின் ரகளை!
இளைஞர் ஒருவரை போலீஸ்காரர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
திருப்பூர்: போதை ஆசாமி போலீஸ்காரரின் சட்டையை கிழிக்க.. போலீஸ்காரரோ போதை ஆசாமியை நடுரோட்டில் தரதரவென இழுத்து செல்ல.. அந்த இடமே போராட்டக்களமாகி விட்டது. திருப்பூர் எஸ்ஏபி சந்திப்பு அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்ஏபி சந்திப்பு அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி. இவரது தலைமையில் சில போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் முரளி என்பவர் வந்தார். இவர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. முரளியின் பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அதனால் அவர் மீது வழக்கு போடப்பட்டு, அந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர் போலீசார்.

வாய்த்தகராறு
ஏற்கனவே போதையில் இருந்த முரளி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த போலீஸ் பொன்னாங்கண்ணிக்கும் முரளிக்கும் வாய்த்தகராறு முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் முரளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல பொன்னாங்கண்ணியின் சட்டையும் தாறுமாறாக கிழிந்தது.

கூச்சல்
கிழிந்த சட்டையை முரளி பிடித்து கொள்ள, மற்றொரு பக்கம் பொன்னாங்கண்ணி முரளியை தரதரவென இழுத்து கொண்டே ரோட்டில் சென்றார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருசிலர் போலீஸ் அராஜகம் ஒழிக என கூச்சலிட்டனர்.

வீடியோ
மேலும் சிலர் அங்கேயே சாலை மறியலில் உட்கார்ந்துவிட்டனர். இதனால் அந்த இடமே பெரும் பரபரப்பாகிவிட்டது. பெரும்பாலான மக்கள் இந்த காட்சியை செல்போனிலும் படம் பிடித்து அதை சோஷியல் மீடியாவில் போட்டு விட்டனர்.

சிகிச்சை
அந்த வீடியோவில் பொன்னாங்கண்ணியை முரளி காலால் எட்டி உதைக்கிறார், அதேபோல, போலீசும் முரளியை கடுமையாக தாக்குகிறார். இதில் பொன்னாங்கண்ணிக்கும், முரளிக்கும் கடுமையான காயம் ஏற்பட்டது. ரெண்டு பேருமே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது சம்பந்தமாக அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications