"அம்பிகா எங்கே".. டைரக்டரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு சித்ரவதை.. யாரந்த பாஜக பிரமுகர்.. அடாவடி தங்கை
சொத்துக்காக சொந்த அண்ணனை சித்ரவதை செய்த தங்கையை போலீசார் தேடி வருகிறார்கள்
திருப்பூர்: சொத்துக்காக சொந்த அண்ணனையே கடத்தி சென்று கட்டிப்போட்டு, சித்ரவதை செய்த தங்கையை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள் .. என்ன நடந்தது திருப்பூரில்?
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை.. 52 வயதாகிறது.. இவர் ஒரு சினிமா அசிஸ்டெண்ட் டைரக்டர்.
இவரது தங்கை பெயர் அம்பிகா.. பல்லடம் சேடபாளையம் பகுதியில் வசித்து வருகிறார்... அவரது கணவர் வேலுச்சாமி.. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

தங்கதுரை
இவர்களுக்கு பூர்வீக சொத்து உள்ளது.. அந்த சொத்தை தங்களுக்கு தருமாறு அம்பிகா குடும்பத்தினர் தங்கதுரையிடம் கேட்டு வந்தனர்... இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினையும் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், தன்னை கடத்தி சென்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கிவிட்டதாகவும், பிறகு தன்னை மனநல மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டதாகவும், அம்பிகா மீது தங்கதுரை பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தங்கதுரை போலீசில் அளித்த புகார் மனுவில் சொல்லி உள்ளதாவது:

வேலுச்சாமி
"நான் சினிமாவில் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன்... என்னுடைய பெற்றோர் இறந்து விட்டனர்... சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டேன்.. ஆனால், 3 மாதத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். இதனால் தனியே வசித்து வந்தேன். பல்லடத்தில் வசிக்கும் எனது தங்கை அம்பிகாவும் அவரது கணவர் வேலுச்சாமியும், தொடர்ந்து எனது பெற்றோரின் சொத்துக்களை தங்களுக்கு எழுதித் தருமாறு கேட்டு வந்தனர். நான் மறுத்து வந்தேன்.

அம்பிகா
இதனால், கடந்த 25-ந் தேதி, பல்லடம் சேடபாளையத்தை சேர்ந்த ஒருவர், தாராபுரம் பகுதியில் தோட்டம் விற்பனைக்கு உள்ளதாக என்னிடம் சொன்னார்.. அதனை பார்ப்பதற்கு என்னை பல்லடம் சேடபாளையம் வரச்சொன்னார்... நானும் அங்கு சென்றேன்.. ஆனால், அங்கு ஏற்கனவே என்னுடைய மைத்துனர் வேலுச்சாமி, அவரது மகன் கோகுலக்கண்ணன் மற்றும் சிலர் தயாராக நின்றிருந்தனர். அவர்கள் என்னை அடித்து கைகளை பின்புறமாக கட்டி, வாயில் துணி வைத்து அடைத்து பேச முடியாமல் செய்துவிட்டனர்.

பிரேஸ்லெட்
பின்னர் பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் உள்ள வேலுச்சாமிக்கு சொந்தமான வீட்டிற்கு கொண்டு சென்று அடைத்து வைத்து சொத்துக்களை எழுதி தரும்படி கேட்டு மறுபடியும் அடித்து கொடுமைப்படுத்தினார்கள்.. என்னை தலைகீழாக தொங்க விட்டு கடுமையாக தாக்கினார்கள்.. வலி தாங்க முடியாத நான் அவர்கள் சொன்ன 21 பத்திர பேப்பர்களில் கையெழுத்து போட்டேன். இதையடுத்து நான் அணிந்திருந்த 5 பவுன் தங்க பிரேஸ்லெட், 7 பவுன் தங்க சங்கிலி, ஒன்றேகால் பவுன் மோதிரம் மற்றும் பணம் ரூ.1.60 லட்சம், என்னுடைய ரேஷன் கார்டு, வங்கி, ஏடிஎம் கார்டு, பான் கார்டு, என்னுடைய சொத்து பத்திரங்கள் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

அம்பிகா எங்கே
பிறகு, எனக்கு வலுகட்டாயமாக மதுபானம் கொடுத்து மயக்கம் அடைய செய்தனர். மறுபடியும் நான் எழுந்தபோது வலுக்கட்டாயமாக மதுபானம் குடிக்க செய்தனர்... மது போதை தெளிந்த நிலையில் நான் பார்த்தபோது பெங்களூரில் உள்ள மனநல காப்பகத்தில் இருந்தேன். அங்கிருந்தவர்களிடம் தகவல் சொல்லி என்னுடைய வளர்ப்பு அம்மா வசந்தி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தேன்... அவர்கள் என்னை பெங்களூரில் வந்து மீட்டனர். பிறகு, பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி என்னுடைய தங்கை குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளேன்" என்று தங்கதுரை கூறியுள்ளார். இந்த புகாரின்பேரில், கடத்தல் வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்..

ஹைலைட்
இறுதியில், தலைமறைவாக இருந்த பல்லடம் சேடபாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி, அவரது மகன் கோகுலக்கண்ணன், மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட ரியாஸ் கான், சாகுல் ஹமீது, அஷ்ரப் அலி, உள்ளிட்ட 5 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்... ஆனால், இந்த வழக்கில் முக்கிய நபரான அம்பிகா தலைமறைவாக இருக்கிறார். அவரைத்தான் போலீசார் தேடி வருகின்றனர். இதில் இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.. கைதான கோகுல கண்ணன் பாஜகவில் உள்ளவராம்.. நகர விவசாய அணி செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார்... சொத்துக்காக உடன்பிறந்த அண்ணனும், சினிமா டைரக்டருமான தங்கதுரையை, சொந்த தங்கையே கடத்தி கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications