கருப்பா..பஞ்சப்பூருக்கு பஞ்சாயத்து வர கூடாது! 15 கிடாய் வெட்டி நேரு பூஜை! வெளுத்துக் கட்டிய உ.பி.கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு விழா வரும் மே மாதம் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திறப்பு விழா எந்தவித பிரச்சனையும் இன்றி நடக்க வேண்டுமென, ரெட்டமலை ஒண்டி கருப்பசாமி கோவிலில் 15 கிடாக்கள் வெட்டி நிர்வாகிகளுக்கு விருந்தளித்து இருக்கிறார் அமைச்சர் கேஎன் நேரு.

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் கிளாம்பாக்கத்திற்கு இணையாக பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

இதை அடுத்து பஞ்சப்பூர் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மட்டுமல்லாது சோலார் திட்டங்கள், சரக்கு வாகன நிறுத்த முனையம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.

trichy panjapur bus stand

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், சரக்கு வாகன நிறுத்த முனையம், சோலார் திட்டங்கள் ஆகியவற்றோடு திருச்சி டைடல் பார்க்கும் பஞ்சப்பூரில் தான் அமைய இருக்கிறது. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை ஏசி வசதி, சர்வீஸ் சென்டர், எஸ்கலேட்டர், லிஃப்ட், ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்து நிறுத்தம், உள்ளூர் பேருந்துகள் நிறுத்தம், பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், ஓய்விடம், உணவகம், கழிவறை, 24 மணி நேர கண்காணிப்பு, உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், புல்வெளி, பூங்கா, நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சபூர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. வரும் மே மாதம் ஒன்பதாம் தேதி இந்த புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது பணிகள் 99 சதவீதம் நிலையில் ஒரு சில பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி புதிய பேருந்து நிலைய திறப்பு விழா எந்தவித பிரச்சனையும் இன்றி நடக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற ரெட்டமலை கருப்புசாமி கோவிலில் நேற்று 15 கிடாய்களை வெட்டி அமைச்சர் கே.என்.நேரு வழிபாடு நடத்தி இருக்கிறார். காலை 9 மணிக்கு கோயிலுக்கு வந்த அவர் கிடாய்களை வெட்டி பூஜை செய்தார்.

தொடர்ந்து கிடாக்கள் சமைக்கப்பட்டு 250 கிலோ கோழிக்கறியும் சமைக்கப்பட்டு அங்குள்ள நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட மத்திய மாவட்ட துணை செயலாளர் செல்வம் தலைமையில் நிர்வாகிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் கட்சியில் சில நிர்வாகிகளை செல்வம் அமைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெரு நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர் என்கிறார்கள் திருச்சி மாவட்ட உடன்பிறப்புகள்.

பல நிர்வாகிகளுக்கு விருந்து குறித்து முறையாக தெரிவிக்காமல் தங்களது ஆதரவாளர்களை மட்டும் முத்துச்செல்வம் அழைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சர் கேஎன் நேரு மீதும் சில நிர்வாகிகள் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+