கிருமிநாசினி திரவம் தயாரிக்கும் 2,750 டன் மூலப்பொருள்கள்.. உ.பி.யிலிருந்து திருச்சிக்கு வந்த ரயில்
திருச்சி: கிருமிநாசினி திரவம் தயாரிப்பதற்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து சரக்கு ரயிலில் திருச்சி வந்த 2,750 டன் மூலப்பொருள் தனியார் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், அவ்வாறு வருபவர்கள் முககவசம் அணிவதோடு, கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி திரவம் மூலம் கழுவி சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் மருந்து கடைகளில் கிருமி நாசினி திரவங்களை வாங்கி வருவதால் பல கடைகளில் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.இந்தநிலையில் கிருமி நாசினி திரவம் தயாரிப்பதற்காக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,750 டன் மூலப் பொருள் (மொலாசஸ்) நேற்று திருச்சி குட்ஷெட் யார்டுக்கு வந்தது.
மொத்தம் 50 வேகன்களில் வந்த இந்த மூலப்பொருளை மோட்டார் எந்திரம் மூலம் டேங்கர் லாரிகளில் ஏற்றி திருச்சி லால்குடியில் உள்ள தனியார் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிருமிநாசினி திரவம் தயாரிக்கப்பட உள்ளது.

Recommended Video
இதேபோல் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 1,000 டன் நெல்மூட்டைகள் திருச்சி குட்ஷெட் யார்டுக்கு நேற்று வந்தன. அவற்றை சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேகன்களில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி மண்ணச்சநல்லூர், மணப்பாறை, மணிகண்டம் பகுதிகளில் உள்ள ஆலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications