ஆகா! திருச்சி மக்களுக்கு இதைவிட பெரிய கொண்டாட்டம் இருக்க முடியாதே! வந்தே பாரத்தால் வந்த குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழ்நாட்டில் தொடங்க உள்ள வந்தே பாரத் ரயில் சேவைகளால் திருச்சிக்கு முக்கிய நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சென்னை- திருநெல்வேலி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. செப்டம்பர் 24ம் தேதி இந்த ரயில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக டிராக்கை சரி செய்ய வேண்டும். குறுகிய வளைவுகளை நீக்க வேண்டும். இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக பணிகள் முடிந்துள்ளன. இதனால் இந்த மாதம் 24ம் தேதி சென்னை - திருநெல்வேலிக்கு 8 மணி நேர ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

2 Good news for Trichy people as the Thirunelveli to Chennai Vande Bharat train service to start

எங்கே நிற்கும்: இந்த ரயில் எந்தெந்த நிறுத்தங்களில் நின்று செல்லும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்று திருநெல்வேலி அடையும். மேல்கட்ட நிறுத்தங்களில் எல்லாம் இந்த ரயில் நிற்கும். இது போக கூடுதலாக ஒரு 1-2 நிறுத்தங்களில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஜங்ஷன் அல்லாத மற்ற பெரிய ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிற்கும் வாய்ப்புள்ளது (ஆனால் முதல் பயணத்தில் இல்லை) என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி: தமிழ்நாட்டில் தொடங்க உள்ள வந்தே பாரத் ரயில் சேவைகளால் திருச்சிக்கு முக்கிய நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது. சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் திருச்சியில் நிற்கும். இந்த ரயில் காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வரும். இன்னொரு பக்கம் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வரும். இதுதான் ரயில் சேவையின் நேரம்.

இதில் திருநெல்வேலியில் காலை 6 மணிக்கு தொடங்கும் ரயில் 10 மணிக்கு திருச்சி வரும். அதேபோல் சென்னையில் பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் 6.50 மணிக்கு திருச்சிக்கு வரும். அதாவது சென்னையில் இருந்து 4 மணி நேரத்தில் இந்த ரயில் திருச்சிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

2 Good news for Trichy people as the Thirunelveli to Chennai Vande Bharat train service to start

திருச்சிக்கு ரயில்: திருச்சிக்கு இதன் மூலம் 4 மணி நேரத்தில் சென்னையில் இருந்து ரயில் சேவை இயங்கும். ஏற்கனவே தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இயங்குகிறது. அது சென்னையில் காலை 6 மணிக்கு தொடங்கி திருச்சியில் 10 மணிக்கு காலையில் இறங்கும். இதன் மூலம் சென்னை - திருச்சிக்கு 2 ரயில்கள் 4 மணி நேர சேவைகளை இயக்குகிறது. இதன் மூலம் மக்கள் எளிதாக இனி சென்னை டூ திருச்சிக்கு பயணிக்க முடியும்.

வந்தே பாரத்: வந்தே பாரத் ரயில் மக்கள் இடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+