மீண்டும் ஷாக்! மதுபானம் குடித்து அடுத்தடுத்து இறந்த 2 பேர்! திருச்சியில் என்ன நடந்தது? தீவிர விசாரணை
திருச்சி: திருச்சி அருகே மதுபானம் குடித்த நிலையில் அடுத்தடுத்து 2 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அவர்களின் இறப்புக்கு மதுபானம் தான் காரணமா? இல்லை வேறு காரணம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தனர். விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேரும், செங்கல்பட்டில் 8 பேர் என மொத்தம் 22 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தான் மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடியில் வசித்த பழனி குருநாதன், பூராசாமி ஆகியோர் மதுபானம் குடித்து பலியாகினர். இதுபற்றிய நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் குடித்த மதுபானத்தில் சயனைடு கலந்து இருப்பது தெரியவந்தது.
இந்த 2 அதிர்ச்சி சம்பவங்களை தொடர்ந்து தற்போது இன்னொரு 2 பேர் இறந்துள்ளனர். இவர்களும் மதுபானம் குடித்த நிலையில் தான் பலியாகி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சியை சேர்ந்தவர் முனியாண்டி (55). அதேபகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவக்குமார் (48).
இவர்கள் 2 பேரும் நேற்று வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்ட்டது. இதையடுத்து இருவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் இன்று காலை சிகிச்சை பலனின்றி சிவகுமார் பலியானார். இதையடுத்து முனியாண்டி மேல் சிகிச்சைக்காக மற்றொருவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிரும் வாகனத்திலேயே பிரிந்தது.
இந்நிலையில் தான் இவர்களின் மரணத்துக்கு காரணம் மதுபானம் என கூறப்படுகிறது. அதாவது நேற்று முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து மதுபானம் குடித்துள்ளார். அதன்பிறகு தான் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது இருவரும் இறந்துள்ளதாகவும் அந்த பகுதியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இருப்பினும் இவர்கள் 2 பேரின் சாவுக்கான சரியான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே மதுபானம் குடித்து 2 பேர் பலியானதாக அந்த பகுதிகளில் வேகமாக செய்தி பரவி வருகிறது. இதனால் குடிமகன்கள் கலக்கமடைந்துள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications