கலப்பு திருமணம் செய்த 30குடும்பங்கள்.. கிராமத்தைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அவலம்..ஆட்சியரிடம் புகார்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஊரை விட்டு ஓடு என்று விரட்டி அடிக்கும் கட்ட பஞ்சாயத்துக் கும்பல் ஒன்று திருச்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவுடன் தஞ்சம் அடைந்துள்ளனர்.

திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்ஞீலி பஞ்சாயத்துக்கு உட்பட்டது ஈச்சம்பட்டி கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கிராமத்தைச் சேர்ந்த ர் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

30 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

30 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

அதாவது இந்த ஊரில் பட்டயதாரர்கள் & ஊராட்சிமன்ற தலைவர் அடங்கிய பஞ்சாயத்துக் குழு, கலப்பு திருமணம் செய்து கொண்ட 30 குடும்பங்களை அப்படியே ஒட்டுமொத்தமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளனர். கோயில் நிகழ்ச்சிகள் முதல் இறுதிச் சடங்கு வரை எல்லா காரியங்களிலும் தங்களை ஒதுக்கி வைத்து வாழ விடாமல் தடுப்பதாகக் கூறி திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 30 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்தனர்.

மயானத்திலும் இடமில்லை

மயானத்திலும் இடமில்லை

தங்களிடம் ஊர் வரியும் வசூலிக்க மறுப்பதாகவும் இந்த 30 குடும்பங்களில் யாரேனும் உயிரிழந்தால், ஊர் மயானத்தில் புதைக்கக்கூட அனுமதி அளிப்பதில்லை என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அரசியல் செல்வாக்கை வைத்துக் கலைத்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மிரட்டி அடாவடி

மிரட்டி அடாவடி

அவர்களின் அத்துமீறலை எதிர்த்துப் பேசினால், ஊரை விட்டு ஓடு என்று அடாவடி செய்து மிரட்டுவதாகப் புகார் கூறுகின்றனர். கோவில்களில் தேங்காய் உடைப்பதில் இருந்து, இறுதிச் சடங்கு வரை எல்லா நிகழ்ச்சிகளிலும் தங்களை ஒதுக்கி வைப்பதோடு, கடைக்குச் சென்று பொருட்களைக் கூட வாங்க விடாமல் விரட்டுவதாகப் புகார் கூறினர். இதனால் சில குடும்பங்கள் வேறு வழியின்றி வெளியூர்களில் சென்று தங்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசுக்குக் கோரிக்கை

தமிழக அரசுக்குக் கோரிக்கை

சாதி மறுப்பு திருமணங்களைச் செய்து கொள்ளும் குடும்பங்களை ஒதுக்கி வைத்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் திருப்பைஞ்ஞீலி ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் மற்றும் கிராம பட்டயதார்கள் ரெங்கநாதன் உள்ளிட்ட கட்ட பஞ்சாயத்துக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+