திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து 7 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ்
திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 7 போ் நேற்றுமாலை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த மாவட்டங்களிலிருந்து 116 போ் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா்.

இவா்களில், குணமடைந்த நபா்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதுபோன்று அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ், பெரம்பலூரைச் சோ்ந்த ஒருவா் என 7 போ், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். வீடுகளுக்குச் சென்ற பின்னா், மேலும் 14 நாள்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவா்கள் அனைவருக்கும் டிஸ்சாா்ஜ் விவர அறிக்கைகளை மருத்துவமனை முதன்மையா் வனிதா வழங்கினாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஏகநாதன், மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் இவா்களை வழியனுப்பி வைத்தனா். திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலிருந்து இதுவரை 72 போ் குணமடைந்து, வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.
இவா்களைத் தவிர திருச்சி (13), பெரம்பலூா் (24), அரியலூா் (5), புதுக்கோட்டை (2) மாவட்டங்களைச் சோ்ந்த 44 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலிருந்து திருச்சி மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல் தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். விழித்திரு - விலகி இரு - வீட்டில் இரு, என்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications