வெளிய வா தல! ‘சூட்டிங்’ பண்ண வந்த ‘ஏகே’வை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்! திணறிப் போன திருச்சி! மாஸ் தான்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : நடிகர் அஜித் வந்திருக்கும் தகவல் சமூக வலைதளங்கள் மூலம் பரவிய நிலையில் திருச்சி மட்டுமல்லாது அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரைபிள் கிளப் முன்பு குவிந்தனர். தல தல என நடிகர் அஜித்தை அழைத்து கூச்சல் போட்டபடி இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் உள்ளது. இங்கு 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 24ம் தேதி தொடங்கிய போட்டிகள் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 1200 போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர்.

மேலும் 16 வயது சபியுத், 19 வயதினருக்கான யூத், 21 வயதினருக்கு ஜூனியர், 21ல் இருந்து 45 வயதினருக்கான சீனியர், 45 வயதில் இருந்து 60 வயதிற்கான சீனியர் மாஸ்டர் ஆகிய பிரிவின் கீழ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

இந்த போட்டியில் ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் விஜயகுமார் , தமிழ்ச்செல்வன் நடிகர் அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக கார் மூலம் நடிகர் அஜித் திருச்சி வந்தார். இதனைதொடர்ந்து 4 பிரிவிகளிலும் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார். இன்று காலை ரைபிள் கிளப்புக்கு வந்த அவர் சீனியர் மாஸ்டர் பிரிவில் கலந்து கொண்டு இலக்கினை நோக்கி சுட்டார். தல அஜித் வருகையை முன்னிட்டு ரைபிள் கிளப்பில் டைட் செக்யூரிட்டி பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அனுமதி அளிக்கப்படவில்லை

அனுமதி அளிக்கப்படவில்லை

உள்ளே யாரும் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் நடிகர் அஜித் வந்திருக்கும் தகவல் சமூக வலைதளங்கள் மூலம் பரவிய நிலையில் திருச்சி மட்டுமல்லாது அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரைபிள் கிளப் முன்பு குவிந்தனர். தல தல என நடிகர் அஜித்தை அழைத்து கூச்சல் போட்டபடி இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரசிகர்கள் கூட்டம்

ரசிகர்கள் கூட்டம்

ஒரு கட்டத்தில் ஆட்கள் நகர முடியாத அளவுக்கு கூட்டம் கூடியதால் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இருந்த போதும் நேரம் செல்ல செல்ல ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் அங்கிருந்து நகர்ந்து சென்று கூட்டத்தை மட்டும் கவனித்தபடி நிற்கின்றன. இந்நிலையில் ரசிகர்கள் கூச்சல் அதிகமாக இருந்தால் நடிகர் அஜித் ரைபில் கிளப் மாடியில் நின்று ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையேசை தோடு வெற்றி குறி காட்டினார்.

வெளியே வா தல

வெளியே வா தல

இதனால் மேலும் உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள் வெளியே வா தல என முழக்கமிட்டனர். மேலும் அஜித்தின் புதிய படத்தின் அப்டேட் என்ன என்று கேட்டதோடு நடிகர் அஜித் வெளியே வரவேண்டும் என முழக்கமிட்டனர். அஜித் மீண்டும் உள்ளே சென்ற நிலையில் நாங்கள் உள்ளே செல்வோம் என்று கூறி முழக்கம் இட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில இடத்தில் மட்டும் தொடர்ந்து அத்திமரலில் ஈடுபட்ட ரசிகர்களை போலீசார் கண்டித்து அனுப்பியதாகவும், மிகச் சிறிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

முகாமிட்ட ரசிகர்கள்

முகாமிட்ட ரசிகர்கள்

மேலும் இந்த துப்பாக்கி சுடுதல் தொடரானது இன்னும் இரண்டு நாட்கள் நடக்கும் என்பதால் தொடர்ந்து ரசிகர்கள் வர வாய்ப்பு இருப்பதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக நடிகர் அஜித் மற்ற நடிகர்களை போல திரைப்பட விழாக்கள் மற்றும் வெளிப்புற படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை. எப்போதாவது சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியாகும் போது மட்டுமே அவரை ரசிகர்கள் கண்டு வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் அஜித் வந்துள்ளதால் உற்சாகமடைந்துள்ள அவர் ரசிகர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+