பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி.. ஸ்கூட்டியோடு உள்ளே விழுந்த வாகன ஓட்டி!
திருச்சி: பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிக்குள் ஸ்கூட்டியுடன் வாகன ஓட்டி உள்ளே விழுந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் பல சமயங்களில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்படும் பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து விடுவது நடக்கும். அவ்வப்போது விபத்து மற்றும் உயிரிழப்புகள் இந்த பாதாள சாக்கடை பணிகளால் தொடங்கின்றன.

சென்னையில் அப்படி இறந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் விபத்தில் சிக்குவபவர்கள் எண்ணிக்கை கணக்கிடவே முடியாது.அந்த அளவிற்கு விபத்துக்களும் உயிரிழப்புகளும் நடந்துள்ளன.
சென்னையில் மட்டுமல்ல கோவை, திருச்சி, சேலம், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளின் விபத்து நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. பாதாள சாக்கடையில் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக உள்ளே விழுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
அப்படித்தான் திருச்சி தென்னூர், அருகே உள்ள வீரமாமுனிவர் தெரு முனையில் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அந்த பள்ளத்தில் வாகன ஓட்டி ஒருவர் தடுமாறி விழுந்து விட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரையும், வாகனத்தையும் மீட்டனர்.
தென்னூரில் உள்ள இந்த ஆபத்தான சாலையில் தினமும் வாகன ஓட்டிகள் விழுவது வாடிக்கையாகி வருவதாகவும், உடனடியாக இந்த பள்ளத்தை சீர் செய்ய வேண்டும் என்றும் திருச்சி மாநகராட்சிக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சியில் இப்படி என்றால். சென்னை மடிப்பாக்கமும் கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருக்கிறது. பாதாள சாக்கடை பணிகள் காரணமாக சாலைகள் மோசமாக உள்ளன. மழைக்காலத்தில் மக்கள் சாலைகளில் செல்வதற்கு அச்சப்படும் நிலை உள்ளது. வடகிழக்கு பருவ மழையின் போது வெள்ள அபாயமும் இருப்பதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications