Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. திருச்சி சிவாவை சந்தித்தது ஏன்?மனம் வருந்திய அமைச்சர் கேஎன் நேரு

திருச்சி சிவா எம்பியின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அமைச்சர் கேஎன் நேரு இன்று அவரை சந்தித்து சமாதானப்படுத்தினார்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுக எம்பி திருச்சி சிவாவின் வீட்டில் நேற்று முன்தினம் தாக்குதல் செய்யப்பட்டது. மேலும் போலீஸ் நிலையத்தில் வைத்து அமைச்சர் கேஎன் நேரு மற்றும் திருச்சி சிவா எம்பியின் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டது தொடர்பான வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தான் திடீரென்று இன்று திருச்சி சிவாவை சந்தித்த அமைச்சர் கேஎன் நேரு, ‛‛இவர் எங்க ஊர்க்காரர். என்னோட தம்பி..'' என பாசமழை பொழிந்தார். இந்த சந்திப்பின் பின்னணியில் முதல்வர் ஸ்டாலின் சொன்னது என்ன? என்பது பற்றியும் கேஎன் நேரு மனம் திறந்து கூறியுள்ளார்.

திருச்சி எஸ்பிஐ காலனியில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நவீன இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தையும் அவர் திறந்து வைத்தார். இதில் திமுக எம்பியான திருச்சி சிவாவின் பெயர் கல்வெட்டு, போஸ்டரில் இடம்பெறவில்லை.

இதையடுத்து விழாவுக்கு திருச்சி சிவாவின் வீடு அமைந்துள்ள நியூ ராஜா காலனி வழியாக அமைச்சர் கேஎன் நேரு உள்ளிட்டவர்கள் சென்றனர். அப்போது கருப்பு கொடி காண்பிக்கப்பட்டது.

இருவரின் ஆதரவாளர்களும் மோதல்

இருவரின் ஆதரவாளர்களும் மோதல்

இதைடுத்து விழா முடிந்த நிலையில் திருச்சி சிவாவின் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் காரை தாக்கினர். வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இவர்கள் அமைச்சர் கேஎன் நேருவின் ஆதரவாளர்கள் என கூறப்பட்டது. மேலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுக, பாஜகவினர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

கட்சியினர் சஸ்பெண்ட்

கட்சியினர் சஸ்பெண்ட்

இதையடுத்து கேஎன் நேருவின் ஆதரவாளர்களான திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், வட்டச செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். அதன்பிறகு அவர்கள் போலீசில் சரணமடைந்தனர். மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சிவா-கேஎன் நேரு சந்திப்பு

திருச்சி சிவா-கேஎன் நேரு சந்திப்பு

இந்நிலையில் தான் இன்று அமைச்சர் கேஎன் நேரு திருச்சியில் உள்ள திருச்சி சிவா எம்பியை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு திருச்சி சிவா எம்பி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் கேஎன் நேரு கூறியதாவது:

நடக்க கூடாதது நடந்துவிட்டது

நடக்க கூடாதது நடந்துவிட்டது

பெயர் இடம்பெறாதது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை சந்திக்கும்படி கூறினேன். துரதிர்ஷ்டம் என்னவென்றால் கருப்பு கொடி காட்டியவர்களை ஏற்றிச்செல்ல காவல்துறை வாகனம் நின்றது அதற்கு அதற்கு பின்னால் எனது வாகனம் மாட்டிக்கொண்டது. அதற்குள் நடக்க கூடாத விஷயம் நடந்துவிட்டது. இப்படி ஒன்று நடந்தது எனக்கு தெரியாது. நான் தஞ்சாவூர் நிகழ்ச்சி சென்றுவிட்டேன். அப்போது தான் திருச்சியில் நடந்த சம்பவம் தெரிந்தது. காவல்துறை வரை சென்றுவிட்டது. ஆட்களை போலீசார் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சொன்னார்கள். அப்போது சிவா எம்பி வந்துவிட்டாரா? என கேட்டேன். அவர் வரவில்லை என்றனர்.

கம்யூனிகேஷன் கேப்

கம்யூனிகேஷன் கேப்

கம்யூனிகேஷன் கேப்பில் இதுபோன்ற சம்பவம் நடந்துவிட்டது. இருவரும் திருச்சியில் கட்சியை கட்டிக்காத்து வருபவர்கள் என முதல்வர் கூறினார். இருவருக்கும் எந்த பிரச்சனையும் இருக்கவே கூடாது என்றார். அப்போது எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் எங்கள் ஊர்காரர் என முதல்வரிடம் கூறினேன். இந்த வேளையில் நேராக பார்த்து சமாதானப்படுத்தும்படி கூறினார். இதன்மூலம் நாட்டு மக்களுக்கும், கட்சியினருக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் வரும் கூறினார்.

முதல்வர் சொன்னது என்ன?

முதல்வர் சொன்னது என்ன?

நான் சிவாவை தம்பி என்று தான் கூறுவேன். என்னை விட வயது குறைந்தவர். நடந்தது பற்றி ஒன்றும் நினைக்காதீர்கள். எனக்கு தெரிந்து இருந்தால் இதனை ஒருபோதும் அனுமதித்து இருக்கமாட்டேன் என கூறினேன். மேலும் முதல்வரிடமும் இதுபோன்று நான் செய்வேனா? என கூறினேன். அப்போது சிவா கட்சியின் மூத்த தலைவர். நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவருக்கு இப்படி செய்வது நல்லதா? என முதல்வர் கேட்டார். தற்போது நாங்கள் 2 பேரும் மனசுவிட்டு பேசிவிட்டோம். இனி இதுபோன்று நடக்காது. நடக்கவும் விடமாட்டேன்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+