Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவுக்கு தோல்வி பயம்.. வாக்காளர்கள் விரலில் வைக்கும் 'மை' எப்படி அழியும்.. கே.என்.நேரு கேள்வி!

அதிமுக தோல்வி பயத்தில் இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றும், அதிக வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெறுவார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதேபோல், தோல்வி பயத்தில் அதிமுகவினர் திமுக மீது தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் கட்சியான திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், எதிர்கட்சியான அதிமுக கூட்டணியின் வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்டோரும் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

இந்த இடைத்தேர்தலில் வாக்களிக்க 2.27 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. முன்னதாக காலை 9 மணி வரை 10.10% வாக்குப் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தற்போது காலை 11 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.

ஜனநாயக கடமை

ஜனநாயக கடமை

அதன்படி காலை 11 மணி வரை 27.89% வாக்குப் பதிவாகி உள்ளது. இதன்படி கடந்த 4 மணி நேரத்தில் 32,562 ஆண்கள் மற்றும் 30,907 பெண்கள் என்று மொத்தம் 63,469 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையாற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் மை அழிந்துவிடுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

கே.என்.நேரு பேட்டி

கே.என்.நேரு பேட்டி

இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்று காலையில் கூட கட்சி நிர்வாகிகளிடம் பேசினேன். நிச்சயம் கை சின்னம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.

தோல்வி பயம்

தோல்வி பயம்

தொடர்ந்து, விரலில் வைக்கும் மை அழிவதாக அதிமுக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, அதிமுக சொல்வதெல்லாம் ஒரு கணக்கில்லை. வாக்காளர்களுக்கு வைக்கும் மை எப்படி அழியும். தோல்வி பயத்தில் பல குற்றச்சாட்டுகளை கூறுவார்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும். அப்படியான சூழல் தான் நிலவுகிறது என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+