ரேஷன் கடைக்கு போன சசிகலா.. திருச்சி ரேஷனில் கண்ட அந்த காட்சி.. ஆபீசருக்கே போயிருச்சு "வீடியோ".. அட
திருச்சி: ரேஷன் வாங்க சென்றிருக்கிறார் சசிகலா.. அப்போது தான் அந்த அட்டகாச சம்பவம் நடந்துள்ளது.. இதுதான் தற்போது இணையத்தில் வீடியோவாக உலா வந்து கொண்டிருக்கிறது.
தமிழக மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், பலவித வசதிகளையும் அறிவித்து வருகிறது.. பணபரிவர்த்தனையையும் எளிமைப்படுத்தி வருகிறது. இதன்மூலம் அரிசி அட்டைதாரர்களின் சுமையையும் குறைத்து வருகிறது.

சலுகைகள்: அதேபோல, கட்டாய விற்பனை செய்வது தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ரேஷன் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது..
பொதுமக்களுக்கு ஏதாவது குறைகள், புகார் இருந்தால், 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கோடைகாலம்: தற்போது கோடைக்காலம் துவங்கிவிட்டதால், பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வெயிலில் அலைக்கழிக்கப்பட கூடாது என்றும், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் மொத்தமாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இப்படி ரேஷன்தாரர்களின் நன்மைக்காகவே, ரேஷன் ஊழியர்களுக்கு பலவிதமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், ஊழியர் ஒருவர், ரேஷன் வாங்க வந்த பெண்ணை அவதூறாக பேசியதாக புகார் கிளம்பி உள்ளது.
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில், சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் பணியாற்றி வருகிறார்.. இந்த ரேஷன் கடைக்கு, இதே பகுதியை சேர்ந்த சசிகலா என்பவர் தன்னுடைய கணவருடன் ரேஷன் வாங்க வந்துள்ளார்.. பணியிலிருந்த நிசாரிடம், ரேஷன் அரிசி கேட்டுள்ளார் சசிகலா.
சசிகலா: அதற்கு நிசார், "100 கிலோ அரிசி மூட்டையை எலி தின்றுவிட்டது" என்று அலட்சியமாக சொன்னாராம்.. அத்துடன், சசிகலா தந்த ரேஷன் கார்டை, சசிகலா மீதே தூக்கி எறிந்து, தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் எதுவுமே புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றார் சசிகலா.. அப்போதுதான் தெரிந்தது, அந்த ரேஷன் ஊழியர் நிசார், பணியின்போது போதையில் இருந்தாராம்.. அத்துடன் தன்னுடைய கையில் பீர் பாட்டிலையும் வைத்துக்கொண்டு, பீர் சாப்பிட்டுக் கொண்டே டியூட்டி பார்த்துள்ளாராம்.
வீடியோ: உடனே சசிகலா இது குறித்து கேட்டதற்கு, சசிகலாவையும், கணவர் தவச்செல்வனையும் அசிங்கமாக பேசியிருக்கிறார் நிசார்.. இந்த சம்பவத்தையெல்லாம் சசிகலாவே முழுவீடியோவாக எடுத்து, சோஷியல் மீடியாவிலும் போஸ்ட் செய்துவிட்டார்.. அதுமட்டுமல்ல, உயர் அதிகாரிகளுக்கும், இந்த வீடியோவை ஷேர் செய்த சசிகலா, "மது அருந்தியபடி பெண்களை இழிவாக பேசும் நியாய விலைக்கடை ஊழியர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கையும் விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications