நீயா-நானா? பிரதமர்-முதல்வர் முன்பே பாஜக-திமுகவினர் கடும் போட்டி! விண்ணை பிளந்த கோஷங்கள்.. பரபரப்பு
திருச்சி: திருச்சியில் ரூ.20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச எழுந்தபோது ‛மோடி.. மோடி.. ' என பாஜகவினரும், அதன்பிறகு ‛‛ஸ்டாலின்.. ஸ்டாலின்’’ என திமுகவினரும் போட்டிப்போட்டு கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாட்டில் ரூ20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதற்கான நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்தில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணையமைச்சர் எல் முருகன், ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, எவ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ‛‛தொட்ட துறையில் எல்லாம் தமிழ்நாடு சிகரம் தொடர்கிறது. திருச்சியில் புதிய விமான முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி.
தென்தமிழ்நாட்டில் ராமேஸ்வர், கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஆன்மிக பயணமாக வருகின்றனர். வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். இதனால் மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும். இதனை பிரதமர் பரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் சேலம் உள்பட பிற விமான நிலையங்களை நவீனமயமாக்க வேண்டும்.
மேலும் சென்னை -பினாங்கு, சென்னை -டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும். சென்னை மெட்ரோ பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். தமிழக வெள்ளப்பாதிப்புகளை சரிசெய்ய நிவாரண நிதி வழங்க வேண்டும்'' என பேசினார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தனது உரையை தொடங்க இருக்கையில் இருந்து எழுந்தபோதே பாஜகவினர் ‛‛மோடி.. மோடி’’ என கோஷமிட்டனர். இதனால் அரங்கமே அதிர்ந்து போனது. அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் பெருமையை பேசியபோது திமுகவினர் ‛‛ஸ்டாலின்.. ஸ்டாலின்’’ என கோஷமிட்டனர். இப்படி மாறிமாறி பாஜக மற்றும் திமுகவினர் ‛‛மோடி.. மோடி..’’, ’’ஸ்டாலின்.. ஸ்டாலின்..’’ என கோஷமிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான்












Click it and Unblock the Notifications