இது புதுசா இருக்குங்க.. சென்னையில் பிரதமர் மோடி! வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட விவசாயிகள்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மெட்ரோ ரயில் திட்ட தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தந்துள்ளார். இந்நிலையில், சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளிக்க இருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் திருச்சியில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வருகை தந்துள்ளார். இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் உரிய நீரைத் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமரை சந்தித்து மனு அளிக்க சென்னை செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

Ayyaakannu

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் காவல் துறையினரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை பெற்றுத் தருமாறு கோரிக்கை மனு அளிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறையினர் விவசாயிகளை வெளியே செல்ல அனுமதிக்காமல் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில்," சுதந்திர இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அமைதியான முறையில் கோரிக்கைகளை வைக்க அரசியலமைப்பு சட்டம் அனுமதித்துள்ள நிலையில், பிரதமரை சந்திக்க தடைவிதிப்பது நியாயமற்றது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு அக்டோபர் மாதம் 20 டி.எம்.சி மற்றும் கடந்த மாதம் 37 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு உரிய தண்ணீரை திறக்காமல் ஏரிகளுக்கு திருப்பி விடுகிறது.

மேட்டூர் அணையில் இன்னும் சில நாட்களில் தண்ணீர் நிறுத்தப்பட உள்ள நிலையில், குறுவை சாகுபடியும் செய்ய முடியாமல், சம்பா சாகுபடியும் பொய்த்துப் போய் விவசாயம் முழுமையாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் பிரதமர் மோடி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

கர்நாடகா அரசு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தண்ணீர் திறக்க பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என பிரதமரை சந்தித்து மனு அளிக்க இருந்த நிலையில் இன்று காவல்துறையினர் வீட்டு காவல் வைத்துள்ளனர். மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் காவல்துறை தங்களை முடக்கியுள்ளனர். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளின் இழப்பீடு மற்றும் நஷ்ட ஈடு கோரி முறையிடப்படும் என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+