Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணப்பாறை லாட்ஜில் உல்லாசம்.. கையில் "ஈர சாக்ஸ்".. காரணம் கேட்டால் ஷாக்காயிடுவீங்க.. சார் யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மணப்பாறை பகுதியில் ரோட்டில் சென்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.. ஒரு சந்தேகத்தின்பேரில்தான் விசாரித்தனர்.. ஆனால், அந்த நபர் சொன்னதை கேட்டு மிரண்டு போய்விட்டார்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்.. 25 வயதாகிறது.. மணப்பாறை ரெயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் ஒரு போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.

Bengaluru to Chennai route and what did Manapparai Police say about this Madurai man

மர்மநபர்கள்: கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி, இவரது ஸ்டுடியோவுக்குள் திருட்டு போய்விட்டது.. பூட்டை உடைத்து, உள்ளே வைத்திருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான கேமரா, லென்ஸ் எல்லாத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

எனவே, இந்த திருட்டு குறித்து மணப்பாறை போலீசில் புகார் தரவும், அவர்களும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்... ஆனாலும், மர்மநபர்கள் சிக்கவில்லை.. இதனிடையே, மணப்பாறை தனிப்படை போலீசார் நொச்சிமேடு பகுதியில், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற ஒரு நபரை, சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்..

முன்னுக்குபின் முரண்: போலீசாரை பார்த்ததுமே அந்த நபர் உளற ஆரம்பித்துவிட்டார்.. எந்த கேள்வி கேட்டாலும் முன்னுக்குப்பின் முரணாகவே பேசினார்.. எனவே, அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், அவர் பெயர் காளிதாஸ் என்பதும், 56 வயதாகிறது, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சந்திராபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர்தான், சந்தோஷின் ஸ்டுடியோவுக்குள் நுழைந்து ஆட்டைய போட்டவர் என்பதும் தெரியவந்தது..

இதையடுத்து, அவரிடமிருந்த கேமரா, லென்ஸ் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு, மதுரையில் இங்கு எதற்காக வந்தீர்கள் என்று, போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையை தீவிப்படுத்தினர். அப்போதுதான் காளிதாஸ் சொன்னதை கேட்டு அதிர்ந்து போனார்கள்.

மதுரைக்காரர்: சொந்த ஊர் மதுரை என்றாலும், திருடுவதற்காக மணப்பாறை வருவாராம்.. முன்கூட்டியே எங்கு கொள்ளையடிக்கலாம் என்பதை நோட்டமிட்டு அதற்கு பிறகு கைவரிசையை காட்டுவாராம்.. இப்போதுகூட நோட்டமிடுவதற்காகத்தான் மணப்பாறை வந்துள்ளார்.. சென்னையில் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார் காளிதாஸ்.. சென்னை-பெங்களூரு, சென்னை-ஹைதராபாத் செல்லும் பஸ்களை இயக்கி வந்துள்ளார்.

சின்ன வயசிலேயே திருட ஆரம்பித்துவிட்டாராம்.. அப்போதெல்லாம் சின்ன சின்ன பொருட்களை திருடும் பழக்கம் நாளடைவில் பெரிய பொருட்களை திருடும் அளவுக்கு வந்துள்ளார்.. எந்நேரமும் திருட்டு தொழிலையே செய்தால், போலீசில் பிடிபட்டுவிடுவோம் என்று நினைத்து, திருட்டு தொழிலை பார்ட்-டைம் ஆக செய்து வந்திருக்கிறார்..

திருட்டு சம்பவங்கள்: லீவு நாட்களில் திருடுவாராம்.. அதுவும் போட்டோ ஸ்டூடியோக்களையே குறி வைத்து திருடுவாராம்.. இந்த போட்டோ ஸ்டுடியோக்களை நோட்டமிடுவதற்காகவே, அதே பகுதியில் லாட்ஜில் ரூம் போட்டு தங்குவாராம். இதனால், இவர் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் சேர்ந்திருக்கின்றன.. ஆனால், ஒருமுறையும் சிக்கியதில்லை-. இதுவரை எந்த வழக்கிலும் கோர்ட்டில் தண்டிக்கப்படாததால், திருட்டு தொழிலையும் கைவிட மனசில்லை.

கொள்ளையடிக்கும் பொருட்களை உடனே, கிடைக்கும் விலைக்கு விற்றுவிட்டு காசாக்கிவிடுவார்.. உடனே பெண்களை லாட்ஜ்களுக்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பது இவரது பழக்கம்... ஆனால், எந்த பெண்களையுமே உல்லாசத்திற்கு நிரந்தரமாக வைத்து கொண்டதில்லையாம்..

Bengaluru to Chennai route and what did Manapparai Police say about this Madurai man

லாட்ஜில் ரூம்: பெரிய பெரிய நகரங்களில் மட்டுமே ரூம் போட்டு வந்துள்ளார்.. வலையில் சிக்கும் பெண்களை அழைத்து உல்லாசமாக இருந்துவிட்டு, பணத்தையும் தந்துவிட்டு உடனே அனுப்பி விடுவாராம்.. கையில் உள்ள காசு தீர்ந்ததும், மறுபடியும் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு, அடுத்து எங்கே கொள்ளையடிக்கலாம் என்று யோசிப்பாராம். ஆனால், என்ன காரணமென்றே தெரியவில்லை, இவரது திருட்டில் அதிகபட்சமாக போட்டோ ஸ்டூடியோக்கள்தான் இருந்திருக்கின்றன..

திருட போகும்போது, அதற்கென சில ஸ்டைல்களை வைத்துக் கொள்வாராம்.. மங்கி குல்லா போட்டுக்கொண்டு, கை, கால்களில் சாக்ஸ் அணிந்து, கையில் கடப்பாறையுடன் போவார்.. பூட்டை உடைக்கும்போது, அக்கம் பக்கத்தில் சத்தம் கேட்காமல் இருப்பதற்காக, சணல் சாக்கினை தண்ணீரில் நனைத்து அதனை ஒரு பையில் போட்டுகொண்டு செல்வாராம்.. உடைக்கும்போது அதனை பூட்டுக்கு மேல் போட்டு விடுவாராம்.. அதனால்தான், ஒருமுறை கூட, காளிதாஸ் யாரிடமும் சிக்காமல் தப்பித்து வந்துள்ளார்..

கைது நடவடிக்கை: இப்போது காளிதாஸ் கைதாகி உள்ளார்.. அவரிடம் கடப்பாரை, குல்லா, சாக்ஸ் என மொத்த பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.. காளிதாஸுக்கு குடும்பம் உள்ளது.. ஆனால், குடும்பத்தை பெரிதாக கண்டுகொள்வதில்லை.. பஸ் டிரைவர் வேலை, மீதி நேரம் திருட்டு வேலை, மீதி நேரம் ரூம் போட்டு பெண்களை வரவழைப்பது, என எப்போதுமே பிஸியாகவே இருந்துவிட்டதால், தன்னுடைய வீட்டுக்கு அவ்வளவாக போக மாட்டாராம். இப்போது "மாமியார்" வீட்டில் காளிதாஸ் ரெஸ்ட்டில் உள்ளார்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+