பாஜக தமிழ்நாட்டில் 1 சீட் ஜெயிச்சாலே அதிசயம்.. எல்லாம் அண்ணாமலை பவர்.. ரவுண்டு கட்டிய எஸ்வி சேகர்!
திருச்சி: அண்ணாமலை குழந்தைத்தனமான அரசியல்வாதியாகச் செயல்பட்டு வருகிறார். பார்க்க வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தால் ஏதோ கோளாறு என்று அர்த்தம் என எஸ்.வி.சேகர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏவும், பாஜக ஆதரவாளருமான நடிகர் எஸ்.வி.சேகர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், நாகை மாவட்டம் நாகூர் தர்கா தலைவரின் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த எஸ்வி சேகர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய எஸ்.வி.சேகர், "விஜயகாந்த் மிகவும் நல்லவர். ஆனால் அரசியலைப் பொறுத்தவரை அவ்வளவு நல்லவராக இருக்கக் கூடாது. நேற்று விஜய் கட்சி துவங்கியதாக அறிவித்தபோது கூட நான் கூறினேன். சினிமாவில் கத்தி பிளேடுகளுடன் வருபவர்கள் தவறானவர்கள் என்று அடையாளம் காணலாம். ஆனால் அரசியல் வாழ்க்கையில் கூடவே இருப்பவர்கள் நமக்கு துரோகம் செய்வார்கள்.
அரசியலுக்கு வரும் நடிகர் விஜய் முதன் முதலாக தேர்தலில் போட்டியிடும்போது தனித்து நின்று ஓட்டு வங்கியை நிரூபித்துவிட்டால், அதன் பின்னர் அவருக்கு மிகப்பெரிய அரசியல் எதிர்காலம் இருக்கும். முதல் தேர்தலிலேயே கூட்டணி அமைத்து போட்டியிட்டுவிட்டால் அதன் பிறகு, தனது உண்மையான ஓட்டு வங்கியை கண்டுபிடிப்பது கடினமாகிவிடும். ஒரு எம்ஜிஆர் தான் இருக்க முடியும்." என்றார்.
தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த எஸ்வி சேகர், "நாடாளுமன்றத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார். ராமர் அவருக்கு அந்த ஆசீர்வாதத்தை வழங்குவார். 3வது முறையாக மோடி பிரதமர் ஆவார். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாமலையின் பங்கு அதில் பூஜ்ஜியமாக தான் இருக்கும்" என்றார்.
அண்ணாமலையின் நடைபயணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த எஸ்வி சேகர், "அண்ணாமலை குழந்தைத்தனமான அரசியல்வாதியாகச் செயல்பட்டு வருகிறார். அரை மணி நேரம் மட்டுமே நடக்கிறார். அண்ணாமலை நடைபயணம் செய்வதால் எந்த பயனும் இல்லை. எப்போதும் கூட்டம் வந்து ஓட்டாக மாறாது. அண்ணாமலை தனது பெருமையை பேசி வருகிறார். கட்சியை வளர்க்கும் திறமை பூஜ்ஜியம் தான். அதன் ரிசல்ட் மே மாதம் தெரியும்.
அதிமுகவுடன் கூட்டணி கூடாது என்பதை திட்டமிட்டு தான் அண்ணாமலை செயல்பட்டு வந்தார். அதன் பலனை இந்த தேர்தலில் பார்ப்பார். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கக்கூடிய ஒரு கட்சி. ஆனால் தமிழகத்தில் பாஜக 3 சதவீதம் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கட்சி. மூன்று சதவீதம் 33 சதவீதம் ஆகுமா என்பதனை வரும் தேர்தல் ரிசல்ட்டில் மட்டுமே நாம் பார்க்க முடியும்.
அண்ணாமலை பாஜகவிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். அண்ணாமலை சொல்வது போல 40க்கு 40 தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் அதிசயம் நடந்தால் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெறும். ஏனென்றால் கூட்டணி இல்லை. அண்ணாமலை மோடியின் திட்டங்களை பொதுமக்களிடம் சரிவர எடுத்துச் செல்லவில்லை. அண்ணாமலை போன பாதை தவறாகிவிட்டது. என்னை பார்க்க வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தால் எனக்கு ஏதோ கோளாறு என்று அர்த்தம்." என காட்டமாகப் பேசியுள்ளார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர்












Click it and Unblock the Notifications