திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினியுடன் பாமக கூட்டணி வைக்குமா? திருமாவளவன் பதில்

Google Oneindia Tamil News

திருச்சி: டெல்லி சட்டசபை தேர்தலில் கிடைத்தப்படிப்பினையை வைத்தாவது பாஜக அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்துவதைக் கைவிடவேண்டும் திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 22ஆம் தேதி குடியுரிமை சட்டத் திருத்ததைக் கைவிடக்கோரி திருச்சியில் பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணிக்கு சிறுபான்மை அமைப்புகளிடம் ஆதரவு கோருவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று திருச்சி வந்தார். அப்போது செய்தியாளார்களிடம் பேசுகையில், ''குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறவேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல வாரியாக ஆயத்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

BJP should withdraw anti people plans: Thol.Thirumavalavan

மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதுவரை தொடர் போராட்டங்கள் நடைபெறும். இச்சட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. இஸ்லாமியர்கள், இந்துக்கள், தலித்களுக்கு எதிரான சட்டம். இச்சட்டத்திற்கு எதிராக கேரளா, புதுச்சேரியில் தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழ்நாடு முதலமைச்சரும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

டெல்லியில் ஏன் தோற்றோம்.. எப்படி தோற்றோம்.. நட்டா தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைடெல்லியில் ஏன் தோற்றோம்.. எப்படி தோற்றோம்.. நட்டா தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. மக்களின் மனநிலை மாறியிருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும். ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து நான் பதில் கூற இயலாது. அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், அப்போது பதில் கூறுகிறேன். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் இதர சங்கங்கள், அமைப்புகள் கேட்டுக்கொண்டபடி இதுகுறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும். ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து நான் பதில் கூற இயலாது. அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், அப்போது பதில் கூறுகிறேன் என்று திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

English summary
BJP should withdraw anti people plans, says Thol.Thirumavalavan in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X