வாகன சோதனையில் வசமாய் சிக்கிய பாஜக செயலாளர்..குட்கா கடத்தல்காரராம்.. திருச்சியில் கம்பியை கவுண்டிங்
திருச்சி : திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்திய பாஜக மாவட்ட பொதுச்செயலாளரை பிடித்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்
Recommended Video
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் , பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பணம், நகை, பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.

தேர்தலையொட்டி வாகன சோதனை
இந்த நிலையில், திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக செல்லும் வாகனங்களை சோதனை மேற்கொண்டனர்.

குட்கா கடத்தல்
அப்போது ஒரு வாகனத்தில் சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரை கைது அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் திருச்சி மாவட்டம் ஒ.கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் செந்தில்குமார் (37) என்பது தெரியவந்தது.

பாஜக பிரமுகர்
இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். குட்கா, புகையிலை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் துறையூர் காவல்துறையுடன் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் செந்தில்குமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

அடுத்தடுத்து அதிர்ச்சி
தேர்தல் நேரத்தில் பாஜக பிரமுகர்கள் அடிக்கடி வழக்குகளில் சிக்கி கைதாகி கட்சித் தலைமையை சங்கடத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் தற்போது பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஒருவர் குட்கா காலத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் போதைப் பொருள் கடத்தியதாக பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications