தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் சென்ற உணவு! மோடி வருகைக்காக உழைத்தவர்களுக்கு நேர்ந்த அவலம்
திருச்சி: இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் மேற்கொள்கிறார். இதற்காக திருச்சி நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கான உணவு, குப்பை வண்டியில் கொண்டு வந்து விநியோகிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
வரும் 22ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, விரதம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்த அவர், இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். எனவே திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. திருச்சி விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

பிரதமரின் பயண திட்டத்தின்படி காலை 11 மணியளவில் காரில், சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் மோடி, தாயார், ரெங்கநாதர் மற்றும் அங்குள்ள சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். எனவே திருச்சி நகர் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இரவு பகல் பாராமல் நூற்றுக்கணக்கில் தூய்மை பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் இவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவு, குப்பை அள்ளும் வண்டியில் கொண்டு வரப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தூய்மை பணியாளர்களுக்கான உணவு அருகில் உள்ள அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று இவ்வாறு விநியோகிக்கப்பட இருந்த உணவானது, குப்பை வண்டியில் குப்பைகளுக்கு நடுவில் வைத்து கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகின்றன.

உணவு மூடப்படாமல் திறந்தே இருந்திருக்கிறது. இதற்கு பக்கத்தில் குப்பைகள் இருந்திருக்கின்றன. இதனால் தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலன் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, இதற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தூய்மையான நகரங்களின் பட்டியலில் திருச்சி முதன்மையாக இருக்கிறது. இதற்கு காரணமாக உள்ள தூய்மை பணியாளர்களை நடத்தும் விதம் இதுதானா? என்றும் பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பியுள்ளனர்.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
திருச்சி வரும் பிரபல ஷூ தயாரிப்பு நிறுவனம்.. 13,364 பேருக்கு வேலை ரெடி.. ரூ.1,379 கோடி முதலீடு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
திருச்சிக்கு ஓடி வந்த தென் கொரிய நிறுவனம்.. ஒரே திட்டம் 13000 பேருக்கு வேலை.. அடிசக்க!












Click it and Unblock the Notifications