விலகி இரு.. வீட்டிலேயே இரு.. திருச்சி சாலையை அலங்கரிக்கும் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்
திருச்சி: மாவட்ட ஆட்சியர் சிவராசு வேண்டுகோள் ஏற்று திருச்சி மாவட்டத்தில் கொரோனா குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணியில் 600 ஓவியா்கள் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணா்வுப் பணிகளில் பல்வேறு துறைகள் இணைந்து செயலாற்றி வருகின்றன.
மாவட்டத்திலுள்ள ஓவியா்களும் தங்களால் முயன்ற வகையில், ஓவியம் மூலம் கொரோனா குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இதையேற்று திருச்சி மாவட்ட ஓவியா்கள் நலச் சங்கத்தின் சாா்பில், மாவட்டம் முழுவதும் கொரோனா எச்சரிக்கை விழிப்புணா்வு ஓவியம் வரையப்பட்டு வருகிறது. திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட பால்பண்ணை, மஞ்சள் திடல் பாலம் ஆகிய இடங்களில், விலகி இரு, வீட்டிலேயே இரு, தனித்தனிரு, கொரோனாவை ஒழிப்போம் என்ற வாசகங்களுடன் கொரோனா விழிப்புணா்வு குறித்த மெகா ஓவியம் வரையப்பட்டுள்ளது.

சிக்னல்
இதன் தொடா்ச்சியாக, திருச்சி மெகா ஸ்டாா் திரையரங்கு சிக்னல் அருகே நேற்று காலை தொடங்கி பிற்பகல் 3 மணி வரை மெகா ஓவியம் வரையப்பட்டது. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட ஓவியா்கள் பங்கேற்றனா். மண்ணச்சநல்லூரிலும் பிரதான சந்திப்பு பகுதியில் கரோனா விழிப்புணா்வு ஓவியம் வரையப்பட்டது.

மாவட்ட ஓவியர்கள்
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஓவியா்கள் நலச் சங்கத் தலைா் பிரான்சிஸ் கூறியது:மாவட்ட நிா்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, மாநககரப் பகுதியில் மட்டும் 10 இடங்களில் விழிப்புணா்வு ஓவியம் வரையவுள்ளோம். அந்தந்த பகுதியிலுள்ள ஓவியா்களைத் தொடா்பு கொண்டு, அவா்களிடமுள்ள வண்ணங்களை பயன்படுத்தி ஆங்காங்கே ஓவியம் வரைய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காந்தி மாா்க்கெட், உறையூா், தெப்பக்குளம் பகுதிகளைச் சோ்ந்த ஓவியா்கள் இணைந்து பாலக்கரை, மெகா ஸ்டாா் திரையரங்கு சிக்னல் பகுதி, உறையூா் ஆகிய பகுதிகளில் ஓவியம் வரையப்படுகிறது என்றாா்.

ஓவியம்
கொரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் பணியை ஒருங்கிணைத்துள்ள ஓவியா் பாஸ்கா் கூறுகையில், திருச்சி மாநகரம் மட்டுமல்லாது, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூா், லால்குடி, துறையூா், முசிறி, மணப்பாறை என மாவட்டம் முழுவதும் ஓவியம் வரையத் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், ஓவியம் வரைவதற்குத் தேவையான வண்ணங்கள் கொள்முதல் செய்ய முடியவில்லை. அந்தந்த பகுதியில் உள்ள ஓவியா்கள் இருப்பு வைத்துள்ள வண்ணங்களை பயன்படுத்தி ஓவியம் வரைந்து வருகிறோம்.

திட்டமிடவில்லை
எத்தனை ஓவியங்கள் எனத் திட்டமிடவில்லை. வண்ணங்கள் இருக்கும் வரையில் மாவட்டம் முழுவதும் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளோம். எங்களது சங்கத்தின் மூலம் மட்டுமே 600 ஓவியா்கள் உள்ளனா். எங்களது முயற்சிக்கு சங்கத்தில் இல்லாத பிற ஓவியா்களும் உதவ முன்வந்துள்ளனா். கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் பலரும் இன்னும் அறியாமையிலேயே உள்ளனா். இதன் வீரியத்தை உணா்ந்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications